இந்தியாவில் இப்படியும் ஒரு திருமணம் நடைபெற நடைபெற முடியுமா என பலரையும் மூக்கின் மேல் விரல் வைக்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது தான் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சி.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகிய இருவருமே காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இவர்களின் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றிருந்தது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளே ஏதோ திருமணத்தை காட்டிலும் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தது. கிரிக்கெட் வீரர்களான தோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, விராட் கோலி என ஒரு பக்கமும் இன்னொரு பக்கம் தமிழ் சினிமா, பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரையிலும் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் பலரும் என இந்தியாவில் இருக்கும் அத்தனை பிரபலங்களும் இங்கே கலந்து கொண்டு அசத்தியிருந்தனர்.
இவர்களின் ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற, கிம் கர்தாஷியன், ஜஸ்டின் பைபர் என சர்வதேச அளவில் பலரும் கலந்து கொண்டிருந்தது, ஆனந்த் – ராதிகா திருமண நிகழ்ச்சிகளை இன்னும் சுவாரசியமாக இருந்தது. இதனிடையே சமீபத்தில் ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணமும் நடந்து முடிந்திருந்தது.
ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்ட்ரில் இந்த திருமணம் மிக மிக பிரண்டமாண்டமாக நடைபெற, இதிலும் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். அரசியலைப் பொறுத்த வரையில் ராம்நாத் கோவிந்த் ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத், சந்திரபாபு நாயுடு என பலரும் இன்னொரு பக்கம் சர்வதேச அளவில் இருந்து கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் காரில் பில்ட் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் ரஜினிகாந்த், தோனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அசத்தியிருந்ததும் அவர்கள் நடனமாடி இருந்ததும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் அள்ளி இருந்தது. இதனிடையே இந்த திருமணம் முழுக்க முகேஷ் அம்பானியின் மனைவியான நீடா அம்பானி கையில் ஒரு பொருள் வைத்துக்கொண்டே அங்கும் இங்குமாக சென்று வந்தது அனைவரையும் கவர்ந்திருந்தது.
நீட்டா அம்பானியின் கையில் ஒரு விளக்கை போல ஒரு படத்தை வைத்திருந்தார். இது என்ன என்பது பற்றி இணையத்தில் பலரும் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்க அது என்ன என்பது பற்றிய விளக்கமும் தற்போது கிடைத்துள்ளது. இது குறித்து வெளியான தகவல்களின் படி, நீடா அம்பானி தனது கையில் தங்க விநாயகர் சிலையை விளக்குகளால் அலங்கரித்து வைத்திருந்ததாகவும், புதிதாக திருமணமாகும் அவரது மகன் மற்றும் மருமகளின் திருமண வாழ்க்கையில் இருளை அகற்றி ஆசீர்வாதத்தை குறிப்பதற்காக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விளக்கானது குஜராத் திருமண விழாவில் மங்களம் மற்றும் செழிப்புகளுக்காக பாரம்பரிய அம்சமாக கருதப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் இந்த திருமண நிகழ்வு முழுக்க அவர் கையில் அது இருந்ததும் தற்போது கவனத்தை பெற்று வருகிறது.