இப்படிப்பட்ட நடிகர்கள் கூட தான் வேலை செய்வேன்… பாலா பகிர்வு…

By Meena

Published:

மதுரையில் பிறந்து வளர்ந்தவர் இயக்குனர் பாலா. அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பாலா தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். தமிழ் சினிமாவில் இவர் எடுக்கும் படங்கள் தனித்துவமானவை.

பாடலாசிரியர் அறிவுமதியின் வாயிலாக பாலு மகேந்திராவிற்கு அறிமுகமானார் பாலா. ஆரம்பத்தில் பாலு மகேந்திராவிற்கு கீழ் தயாரிப்பு உதவியாளராக பணிபுரிந்தார் பாலா. பின்னர் அவர் இயக்கும் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ‘சேது’ படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் நல்ல விமர்சனங்கங்களைப் பெற்று வெற்றிப் பெற்றதோடு விக்ரம் அவர்களின் கேரியரில் இப்படம் திருப்புமுனையாகவும் முக்கியமானதாகவும் இடம் பெற்றது. அது மட்டுமல்லாமல் சேது திரைப்படம் பல விருதுகளை வென்றது.

தொடர்ந்து ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’, ‘அவன் இவன்’, ‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’ போன்ற படங்களை இயக்கியுள்ளார் பாலா. இவரது படத்தின் நாயகர்கள் தனித்துவமான தோற்றத்தை ஏற்று நடிப்பார்கள். அதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பாலா.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட இயக்குனர் பாலா, என்னுடைய படத்தில் நடிக்க வரும் நடிகர்கள் படத்துக்காக கடுமையா உழைக்கணும். சும்மா ஏனோ தானோனு வந்துட்டு ஆட்டம் போடுறவங்க கூட நான் வேலை செய்ய தயாரா இல்லை. அதனால எத்தனை கோடி வருமானம் வந்தாலும் ஏத்துக்க மாட்டேன். படத்துக்காக சின்சியரா வேலை பாக்குற நடிகர்கள் கூடத் தான் நான் வேலை செய்ய விரும்புவேன் என்று பகிர்ந்துள்ளார் பாலா.

Tags: பாலா