என் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் என் கண்ணோட்டத்தை மாத்திடுச்சு… ஆனந்தராஜ் பகிர்வு…

By Meena

Published:

பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் ஆனந்தராஜ். இவரது தந்தை அறுவை சிகிச்சை நிபுணராவார். ஆனந்தராஜ் அவர்களை காவல்துறை அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். ஆனால் ஆனந்தராஜ் அவர்களோ சினிமாவால் ஈர்க்கப்பட்டார்.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாய்ப்புகளை தேடி அலைந்தார் ஆனந்தராஜ். 1988 ஆம் ஆண்டு பிரபு மற்றும் சிவகுமார் நடித்த ‘ஒருவர் வாழும் ஆலயம்’ படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் 1990 ஆம் ஆண்டு ‘ராஜா கைய வச்சா’ படத்தில் நேர்மறையான பாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார் ஆனந்தராஜ்.

நேர்மறையான கதாபாத்திரத்தில் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கவே, அதில் தொடர்ந்து நடித்தார். விஜயகாந்த் அவர்களுடன் பெரும்பாலான படங்களில் நடித்து பிரபலமானார் ஆனந்தராஜ். ஒரு சில படங்களில் துணை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் ஆனந்தராஜ்.

2000 களின் பிற்பகுதியில் நகைச்சுவை கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் ஆனந்தராஜ். ‘நானும் ரவுடி தான்’, ‘குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’, ‘பிகில்’ போன்ற திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றவர்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ஆனந்தராஜ் அவர்கள், என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது அது என் கண்ணோட்டத்தை மாற்றி விட்டது. நான் ஒருநாள் கடைவீதிக்கு சென்றிருக்கும் போது என்னை ஒருவர் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. சாதாரணமா கொஞ்சம் வழி விடுங்க சார் அப்படினு சொல்லிட்டு போய்ட்டார். அப்போது தான் நினைத்தேன், நாம் ஒன்றும் பெரிய ஆள் இல்லை, சினிமாவை பிடிக்காதவர்கள், சினிமாவை பார்க்காதவர்களுக்கு நாம் ஒரு சாதாரண மனிதன் தான் என்று நினைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார் ஆனந்தராஜ்.