மைனா படத்தில நடிச்சதுக்கு இவ்வளவு தான் சம்பளம் கொடுத்தாங்க… விதார்த் பகிர்வு…

By Meena

Published:

தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் விதார்த் அவர்களின் இயற்பெயர் வெங்கடசுப்பிரமணியன் என்பதாகும். விதார்த் தனது நண்பர்கள் சில பேர் மூலம் கூத்துப் பட்டறையில் சேர்ந்து முறையாக நடிப்பினை கற்றார் விதார்த்.

2001 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி மாதவன் நடித்த ‘மின்னலே’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் சிறு சிறு கதாபாத்திரங்களான நாயகர்களின் நண்பன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் விதார்த்.

கூத்துப் பட்டறையில் விதார்தின் நடிப்புத் திறமையை பார்த்த இயக்குனர் பிரபு சாலமன் தனது படங்களான ‘கொக்கி’ (2006), ‘லீ’ (2007), ‘லாடம்’ (2009) ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடிக்க வைத்தார். அவரது நடிப்பினால் ஈர்க்கப்பட்ட பிரபு சாலமன் தனது அடுத்த படத்தில் நாயகனாக விதார்தை நடிக்க வைக்க முடிவெடுத்தார்.

அதன்படி 2010 ஆம் ஆண்டு ‘மைனா’ திரைப்படத்தில் விதார்த் அவர்களை நாயகனாக அறிமுகம் செய்துவைத்தார். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று விதார்த் அவர்களின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து ‘முதல் இடம்’, ‘கொலைகாரன்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘வீரம்’, ‘குற்றமே தண்டனை’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் விதார்த்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட விதார்த், தனது திரையுலக பயணத்தை பற்றி பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியது என்னவென்றால், மைனா படத்தை ஒரு வருஷம் எடுத்தாங்க. நான் அதில் 65 நாட்கள் நடித்தேன். படம் நல்ல ஹிட்டானது. ஆனால் அப்படத்தில் நடித்ததற்கு எனக்கு சம்பளமாக ஒரு இலட்சம் தான் கொடுத்தாங்க என்று பகிர்ந்துள்ளார் விதார்த்.