கடைசியில தியேட்டரில் கதறுனது ரசிகர்கள் தான்!.. ஷங்கர் இப்படி சொதப்பிட்டாரே!.. இந்தியன் 2 விமர்சனம்!

By Sarath

Published:

ஷங்கர் படம் கமல்ஹாசன் பல கெட்டப்புகள் போட்டு இந்தியன் தாத்தாவாக நடித்திருக்கிறார் என நம்பிப் போன ரசிகர்களுக்கு இந்தியன் 2 மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். படம் அந்தளவுக்கு சூர மொக்கையாகத்தான் உள்ளது.

கருத்து கந்தசாமி போல லஞ்சம், ஊழல் இருக்கக் கூடாது என சொல்ல வரும் ஷங்கர் சொந்த வீட்டிலேயே அது இருந்தால், அதை எதிர்த்து போராடினால், அம்மா செத்துடுவாங்க, அப்பா அரஸ்ட் ஆகிடுவாங்க என பயம் காட்டுவது ஏன் என்று தான் புரியவில்லை.

இந்தியன் தாத்தா மீண்டும் வருவதற்கான நோக்கமே ரொம்ப மொக்கையாக இருக்க, அவருடைய இன்ட்ரோ மற்றும் 100 வயதுக்கு மேற்பட்ட அவரது மேக்கப் என அனைத்துமே ஃபேக்காக உள்ளது போலத்தான் தெரிகிறது.

இந்தியன் படத்தில் ஒரு கதை அதற்கான கரு, ஃபிளாஷ்பேக், கிளைமேக்ஸ் என இருக்கும். ஆனால், இந்தியன் 2வில் இவை எதுவுமே இல்லாமல், பாபி சிம்ஹாவையும் விவேக்கையும் வைத்து அந்நியன் படத்தில் விக்ரமை தேடி அலைவது போல அலைவது தான் படமாக உள்ளது.

இந்தியன் 3 படமும் கமல்ஹாசன் சிலாகித்ததை போல சூப்பராக இருக்காது என்பது கடைசியாக காட்டப்படும் அதன் டிரைலரிலேயே தெரிகிறது. ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்து விட்டு அதன் பாதிப்பில் இந்தியன் 3 கதையை உருவாக்கியிருக்கிறார் ஷங்கர் என தெரிகிறது.

ஆனால், எஸ்.ஜே. சூர்யா வர்மக் கலை கற்றுக் கொண்டு இந்தியன் தாத்தாவையே அட்டாக் செய்வது போன்ற காட்சிகள் எல்லாம் காமெடியின் உச்சம்.

மொத்தத்தில் கமல்ஹாசனின் நடிப்புக்கும் ஷங்கரின் பிரம்மாண்ட மேக்கிங்கிற்கும் நீதி செய்யாத ஒரு படமாகவே இந்தியன் 2 உருவாகி இருக்கிறது. முதல் பாகமே முடியலடா சாமின்னு தியேட்டரில் ரசிகர்கள் எழுந்து செல்லும் நிலையில், இந்தியன் 3 படத்துக்கு எல்லாம் இப்படி புரமோட் செய்து ஏமாற்ற நினைத்தால் ரசிகர்கள் டென்ஷன் ஆகி விடுவார்கள்.

இந்தியன் 2: சத்ய சோதனை

ரேட்டிங்: 2.75/5.