பயிற்சியில் இருக்கும் போது ஆடிய ஆட்டம்.. பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட சிக்கல்..!

  பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பயிற்சியில் இருக்கும் போது பல்வேறு முறைகேடுகள் செய்ததாக புகார் வந்துள்ள நிலையில் இது குறித்து விசாரணைக்கு ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. யுபிஎஸ்சி…

ias 1

 

பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பயிற்சியில் இருக்கும் போது பல்வேறு முறைகேடுகள் செய்ததாக புகார் வந்துள்ள நிலையில் இது குறித்து விசாரணைக்கு ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பூஜா என்ற பெண் புனே மாவட்ட உதவி ஆட்சியராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத சில வசதிகளை பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக அவர் தனது சொந்த காரில் மகாராஷ்டிரா அரசு பலகை, சிவப்பு நீல சைரன் விளக்கு பயன்படுத்தியதாக கூறப்பட்டது.

அது மட்டும் இன்றி கூடுதல் ஆட்சியர் இல்லாத போது அவரது அறையை பயன்படுத்தியதாகவும் அந்த அறையில் உள்ள சில பொருட்களை அகற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தனது பெயரில் லெட்டர் ஹெட், பெயர் பலகை உட்பட சில வசதிகள் வழங்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

பூஜாவின் தந்தை ஓய்வு பெற்ற அதிகாரி என்பதால் அவரது கோரிக்கைகளை நிறைவேற்றும் படி நெருக்குதல் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து புனே மாவட்ட ஆட்சியர் மாநில தலைமை செயலாளருக்கு புகார் கடிதம் எழுதியதால், பூஜா உடனே புனேயில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அது மட்டும் இன்றி பணியில் சேர்வதற்கு முன்னே பூஜா ஒரு சில வசதிகளை கேட்டதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் ஓபிசி இட ஒதுக்கீட்டில் அவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்ப வருமானம் ஆண்டுக்கு எட்டு லட்சத்துக்குள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவரது தந்தையின் வருமானம் ஆண்டுக்கு   43 லட்சம் என்றும் அவரது சொத்து மதிப்பு 40 கோடி என்றும் தெரியவந்துள்ளது. இதனால் அவர் ஓபிசி பிரிவில் தேர்வு செய்யப்பட்டது செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.