குப்பைனு இனிமே தூக்கி போட்டுடாதீங்க… ஒரே வருசத்துல அத வெச்சே லட்சதிபதியான நபர்..

By Ajith V

Published:

இந்த உலகில் பலரும் எப்படியாவது பெரிய பணக்காரர் ஆகிவிட வேண்டும் என பல நல்ல வழிகளில் நிறைய முயற்சிகளை செய்திருந்தாலும் அதற்கான பலன் கிடைப்பதற்கு நேரம் நிறைய எடுத்துக் கொள்கிறது. ஆனால் இன்னொரு பக்கம் இதிலிருந்து கூட அதிர்ஷ்டத்தை ஒருவர் பெற முடியுமா என நாம் கருதும் போது அதில் லட்சக்கணக்கான பணத்தை ஒருவர் ஈட்டி உள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

ஆனால் உண்மையில் அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ஆஸ்திரேலியாவின் கலிஃபோர்னியா பகுதியில் ஒரு நபருக்கு நடந்துள்ளது. நமது வீட்டை சுற்றி எங்கேயாவது குப்பை கூடி இருந்தால் அதை பார்க்கும் போது இதில் என்ன இருக்கப் போகிறது என்று நாம் எளிதில் கடந்து விடுவோம். ஆனால் அதில் சில விஷயங்களை தேடி தான் ஒருவர் ஒரே வருடத்தில் லட்சாதிபதியாகி உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியைச் சேர்ந்தவர் தான் லியானார்டோ அர்பனோ. இவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு பழக்கத்தை வாடிக்கையாகவே வைத்துள்ளார். அதாவது தினமும் தனது சைக்கிள் அல்லது காரில் சிட்னியை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகளைத் தேடி அதில் சில பொருட்களை எடுத்து மறு விற்பனை செய்து பணத்தை ஈட்டியும் வந்துள்ளார்.

அங்குள்ள கவுன்சில்கள் ஆண்டுக்கு பலமுறை குப்பைகளை ஈட்டி சேவை செய்யும் சூழலில் இலவசமாகவும் இதனை செய்து வருகிறது. இதனால் மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் தேவைப்படாத பல பொருட்களான பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களையும் வீசி வருவதாக கூறப்படுகிறது. இதில் சற்று பழுது அடைந்திருக்கும் பழைய டிவி, கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பிற பொருட்களையும் தேடி தேடி குப்பைகளில் இருந்து எடுத்துள்ளார் லியானார்டோ அர்பனோ.

இலவச சேவைகள் அப்பகுதியில் இருப்பதால் சற்று சிறிய பழுது இருந்தால் கூட எலக்ட்ரானிக் கேட்ஜெட் பொருட்களை அங்குள்ள மக்கள் குப்பையில் வீசி விடும் நிலையில் அதனை சரி செய்து லியானார்டோ அர்பனோ விற்று பணத்தை உருவாக்கி வந்ததாக கூறப்படுகிறது.

இதில் சிறிய பழுதடைந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்கள் லியானார்டோவுக்கு கிடைக்க அதை கொஞ்சம் பணம் செலவு செய்து நல்ல விலைக்கு விற்று பணத்தை பார்த்து வந்துள்ளார். இப்படி கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஏறக்குறைய 66,000 க்கும் மேல் டாலர்களை இந்த குப்பைகளில் கிடக்கும் எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்களின் மூலம் மறுவிற்பனை செய்து சம்பாதித்துள்ளார் லியானார்டோ.

இவை இந்திய மதிப்பில் சுமார் 56 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது. குப்பை பொருள்களில் இருந்து கூட இப்படி ஒரு மறு விற்பனை செய்யலாம் என உலகில் பலருக்கும் உதாரணமாக இருக்க லியானார்டோ அர்பனோ விளங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.