பிஎப் அட்வான்ஸ் அப்ளை பண்றீங்களா.. லட்டு மாதிரி அப்படியே பணம் வர இதுதான் வழி

By Keerthana

Published:

டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (epfo) கணக்கில் இருந்து மாத சம்பளம் வாங்குவோர் பணம் எடுக்கும் போது என்ன தவறுகள் செய்கிறார்கள் தெரியுமா? இதை பாருங்கள்.

பிஎப் என்று பொதுமக்களால் சுருக்கமாக அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது மாத சம்பளம் வாங்குவோரின் பொக்கிசம் ஆகும்.. ஆனால் அன்றாட வாழ்வாதார செலவுகளை தாண்டி திடீரென அதிகரிக்கும் கல்வி செலவு, வீடு கட்டும் செலவு, மருத்துவ செலவு காரணமாக பிஎப் பில் அட்வான்ஸ் எடுக்கிறார்கள்,

பிஎப் இல் பணத்தை அட்வான்ஸ் ஆக எடுக்க விரும்புவோர் அதற்கு EPFO தளத்தில் விண்ணப்பிக்கிறார்கள்.. ஆனால் விண்ணப்பிக்கும் பலர் செய்யும் தவறு என்ன வென்றால், ஒரே பிஎப் கணக்கிற்கு பணத்தை மாற்றாதது. ஒருவர் தான் வேலையும் செய்யும் நிறுவனத்தை விட்டு விலகிய பின்னர், இரண்டாவது நிறுவனத்தில் சேருவார்கள்.

இரண்டாவது நிறுவனத்தில் சேர்ந்த உடன், முதல் நிறுவனத்தில் உள்ள பிஎப் கணக்கு பணத்தை கையோடு இரண்டாது அதாவது வேலை செய்யும் நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றிவிட வேண்டும்.

அப்படி மாற்ற வேண்டும் என்றால், கண்டிப்பாக ஏற்கனவே வேலை செய்த நிறுவனம் பிஎப் கணக்கில் நீங்கள் வேலையைவிட்டு நின்ற தேதியை குறிப்பிட வேண்டும். ஒரு வேளை உங்கள் பழைய நிறுவனம் பிஎப் கணக்கில் நீங்கள் வேலையை விட்டு நின்ற தேதியை குறிப்பிடாவிட்டால் உங்களால் பிஎப் கணக்கில் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதுதான் பலரும் செய்யும் தவறு.

எனவே பிஎப் கணக்கில் முன்பணம் எடுக்க விரும்பினால் உங்கள் பழைய நிறுவனத்தை தொடர்பு கொண்டு பிஎப் கணக்கில் நீங்கள் வேலையை விட்டு நின்ற தேதியை குறிப்பிட்டு முறைப்படி ராஜினாமா செய்யுங்கள். ப்படி செய்தால் எந்த பிரச்சனையும் இன்றி பிஎப் கணக்கில் நீங்கள் விலகிய தேதியை அந்த நிறுவனமும் பதிவிட்டு விடும். அப்படி பதியவில்லை என்றால் நிறுவனத்தை அழைத்த ராஜினாமா செய்த நாளை குறிப்பிட சொல்லங்கள்.

அதன் பிறகு நீங்கள் பழைய பிஎப் கணக்கில் இருந்து உங்கள் புதிய நிறுவனத்தின் கணக்கிற்கு பணத்தை மாற்ற முடியும். அப்படி மாற்றிய பின்னர் நீங்கள் பிஎப் அட்வான்ஸ் தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தின் இறுதியில் பிஎப்பில் உள்ள வங்கி கணக்கின் செக் லீப்பை பென்சிலால் அடித்து அதை இணைத்துவிடுங்கள்.

அப்படி இணைத்தால் உங்கள் விண்ணப்பம் 20 நாளில் பரிசீலனை செய்யப்பட்டு 20 முதல் 25 நாளில் உங்கள் வங்கி கணக்கில் பிஎப் அட்வான்ஸ் தொகை சேர்ந்துவிடும். பிஎப் அட்வான்ஸ் என்பது எல்லா பணத்தையும் எடுக்க முடியாது. உடல் நிலை பிரச்சனை என்று கூறி எடுத்தால் எளிதாக எடுக்கலாம். அதேநேரம் உங்கள் பங்கு தொகையில் மட்டுமே 50 சதவீதம் அட்வான்ஸ் எடுக்க முடியும்.