தமிழ் சினிமா உலகில் எத்தனையோ பாடலாசிரியர்கள் வந்தாலும் குறிப்பிட்ட சிலரை இசை ரசிகர்கள் என்றும் மறப்பதில்லை. கண்ணதாசன், மருதகாசி, பட்டுக்கோட்டையார், வாலி, வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய், தாமரை, அறிவுமதி, விவேகா, சினேகன் போன்ற பல புகழ் பெற்ற பாடலாசிரியர்கள் சூப்பர் ஹிட் பாடல்களைத் தமிழ்சினிமா உலகிற்கு அளித்திருக்கின்றனர். அந்த வகையில் விஜய், அஜீத் உள்ளிட்டோருக்கு ஓப்பனிங் பாடல் மற்றும் மாஸ் பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் கபிலன். மேலும் பலநூறு சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
அஜீத்துக்கு ஆழ்வார் பட ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அது. ஆழ்வார் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். அப்போது நள்ளிரவைத் தாண்டியும் ரெக்கார்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பாடலுக்கு சரியான வரிகள் கிடைக்காமல் யோசித்துக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அஜீத்தும் அங்கிருந்திருக்கிறார். அப்போது ஸ்ரீ காந்த் தேவா பாடலாசிரியர் கபிலன் இயற்றிய ஒரு சில வரிகளை அஜீத்திடம் காட்டியிருக்கிறார். உடனே அஜீத் நள்ளிரவில் கபிலனுக்குப் போன் செய்து வர முடியுமா என்று கேட்டிருக்கிறார். உடனே கபிலன் பறந்து வர அப்போது இந்த வரிகளை மேலும் மெருக்கேற்றிக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
ஆனால் அதற்கு முன்னரே வாலி மற்றும் இயக்குநர் பேரரசு ஆகியோர் பாடல்களை எழுதிக் கொடுத்திருந்தனர். இந்த இரண்டு பாடல்களும் அஜீத்துக்கு திருப்தி அளிக்காத நிலையில் கபிலனை எழுதச் சொல்லி கடைசியாக அதை ஓகே செய்திருக்கிறார். அதன்பின் சில நாட்கள் ஓடியது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகி கபிலன் எழுதிய அந்தப் பாடலுக்கு தியேட்டரே எழுந்து ஆடிக் கொண்டிருந்தது.
என்னோட படத்துக்கு 100ரூபாய் தான் டிக்கெட்.. தாராள சலுகையை அறிவித்த பார்த்திபன்..
. ஆனால் படத்தின் டைட்டில் கார்டில் பாடல்கள் பகுதியில் வாலியின் பெயர் மற்றும் இடம்பெற்றிருந்தது. இதைக் கவனித்த பாடலாசிரியர் கபிலன் அஜீத்தை போனில் தொடர்பு கொண்டு என்னுடைய பாட்டை படத்தில் பயன்படுத்தியிருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அஜீத் ஆம்.. ! நன்றாக வந்திருக்கிறது என்று கூற, ஆனால் பாடல்கள் பகுதியில் என்னுடைய பெயர் இடம்பெறவில்லை என்று கூறி ஆதங்கப்பட்டிருக்கிறார்.
பின் தவறுக்கு வருத்தம் தெரிவித்த அஜீத் உடனே மறுநாளே படத்தின் டைட்டில் கார்டில் பாடல்கள் வாலி-கபிலன் என்று இடம்பெறும்படி இயக்குநரை மாற்றச் சொல்ல உடனே மாற்றப்பட்டு அவருக்குரிய அங்கீகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி இடம்பெற்ற அந்த பாடல் ஆழ்வார் படத்தில் இடம்பெற்ற அன்புள்ள காதலி.. அன்றாடம் என்னைக் காதலி என்ற பாடல்தான் அது.