என்னோட படத்துக்கு 100ரூபாய் தான் டிக்கெட்.. தாராள சலுகையை அறிவித்த பார்த்திபன்..

By John A

Published:

தமிழ் சினிமாவில் எப்போதுமே புதுமை இயக்குநராகவும், கதை சொல்வதில் தனியுக்தி, வித்தயாசமான பாத்திரப் படைப்புகள் என அனைத்திலுமே தனித்துவம் காட்டுபவர் இயக்குநர் பார்த்திபன். உலக சினிமா தரத்தில் தரமான படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு லாபத்தைக் கூட பார்க்காமல் திரைப்படங்களை எடுப்பவர். ஒத்த செருப்பு, இரவின் நிழல், பச்ச குதிர, இவன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், இவன், குடைக்குள் மழை போன்ற பல திரைப்படங்களை இயக்கி வித்தியாசமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்தவர்.

அந்த வகையில் இரவின் நிழல் படத்திற்கு அடுத்தபடியாக தற்போது பார்த்திபன் இயக்கியிருக்கும் படம்தான் TEENZ. தனது பயாஸ்கோப் டிரீம்ஸ், அகிரா புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. திரில்லர் படமான இதில் யோகிபாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

உஷார் மக்களே..! மூளையைத் தின்னும் அமீபா.. எச்சரிக்கையாக இருப்பது எப்படி? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

வருகிற ஜுலை 12-ம் தேதி இந்தியன் 2 படத்துடன் டீன்ஸ் திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்காக இயக்குநர் பார்த்திபன் ரசிகர்களுக்கு ஓர் சலுகையை அறிவித்துள்ளார். அதன்படி படம் வெளியான முதல் சில தினங்களுக்கு தியேட்டர்களில் டிக்கெட் விலை ரூ.100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் பார்த்திபன் தெரிவிக்கையில், “எதற்காகவும் என்னை நான் குறைத்துக் கொண்டேதே இல்லை. But TEENZ படத்தின் டிக்கெட் விலை முதல் சில தினங்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.100 மட்டுமே. இதில் நட்டமே இல்லை. வசதி குறைவானவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே.” என்று தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் டீசர் முதன் முதலில் சென்சார் செய்யப்பட்ட டீசர் என்ற பெருமையுடன் வெளிவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் தனக்கு முறையாக பணிகளைச் செய்து கொடுக்கவில்லை என்று பார்த்திபன் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.