18வது மாடியில் இருந்து கீழே விழுந்த லிப்ட்.. சிறு காயமின்றி உயிர் தப்பிய பெண்.!

By Bala Siva

Published:

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் என்ற பகுதியில் 18வது மாடியில் இருந்து திடீரென லிப்ட் அறுந்து கீழே விழுந்த நிலையில் அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக சிறு காயம் இன்றி  பெண் ஒருவர் உயிர் தப்பியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் என்ற பகுதியில் அப்பார்ட்மெண்ட் வீட்டில் குடியிருந்த பெண் ஒருவர் லிப்டில் 20வது மாடியில் இருந்து இறங்கினார். அப்போது இரண்டு மாடிகள் இறங்கிய நிலையில் 18 வது மாடியில் திடீரென அந்த லிப்ட் அறுந்து கீழே விழுந்தது.

இதனால்  பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்குள்ள பொதுமக்கள் லிப்டை உடைத்து உள்ளே பார்த்தபோது அதில் ஒரு பெண் எந்தவித காயமும் இன்றி இருந்தார். ஆனால் அதே சமயத்தில் அவர் அச்சத்துடன் இருந்த நிலையில் உடனே அவரை வெளியே அழைத்து அவருக்கு தண்ணீர் கொடுத்து அவரது பயத்தை பொதுமக்கள் போக்கினர்.

இந்த நிலையில் லிப்டில் இருந்து கீழே விழுந்து உயிர் தப்பி அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னுடைய அபார்ட்மெண்டை கட்டிய கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் அதை மெயின்டன் செய்யும் ஏஜென்சி ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீதும் அவர் புகார் அளித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் லிப்ட் பழுது பார்க்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் இருக்கிறது என்றும் ஆனால் ஜூன் 15ஆம் தேதியே லிப்ட் பழுது பார்க்கும் கால அவகாசம் முடிந்துவிட்டதை அடுத்து இன்னும் பில்டர் மற்றும் மெயின்டனன்ஸ் நிறுவனத்தினர் பழுது பார்க்கவில்லை என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குருகிராம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.