பிறப்பு சான்றிதழ் தொடர்பாக மத்திய அரசு அதிரடி உத்தரவு.. 80ஸ், 90ஸ் கிட்ஸ் உடனே பாருங்க

By Keerthana

Published:

டெல்லி: 80களில், 90களில் பிறந்தவர்கள் என்றால், பிறப்பு சான்றிதழ் தொடர்பான விஷயத்தை உடனே பாருங்கள். 2023ல் நிறைவேற்றப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம் அமலுக்கு வந்துள்ளால் பிறப்பு சான்றிதழ்களை வாங்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. எனவே 90ஸ், 80ஸ் கிட்ஸ்கள் இதை பாருங்கள்.

பிறப்பு சான்றிதழ் தொடர்பான புதிய விதி கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தள்ளது. இதன்படி நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம். ஆதார் அட்டை, கல்வி பயில, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஓட்டுநர் உரிமம் வாங்க, பாஸ்போர்ட் விண்ணப்பிக்க , அரசுப் பணிகளில் சேர. திருமணப் பதிவு போன்ற பல்வேறு சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்தலாம்.

மத்திய அரசு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) தொடர்பாக 2023 ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தில் தான் பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.ஆதார் அட்டையை எப்படி ஆவணமாக பயன்படுத்துகிறமோ அதேபோல் பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும்.

அதேநேரம் பிறப்பு சான்றிதழை பலரும் டிஜிட்டல் முறையில் பெறவில்லை என்ற நிலை உள்ளது. இனி டிஜிட்டல் முறையில் பெற முடியும். பிறப்பு சான்றிதழ்களை வாங்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. 80களில், 90களில் பிறந்தவர்கள் இதை பாருங்கள்.

ஜனவரி 1 2000க்கு முன் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க இந்த வருடம் டிசம்பர் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2000க்கு பின் பிறந்து 15 வருடமாக பிறப்பு சான்றிதழ் வாங்காதவர்களுக்கும் இந்த வருடம் டிசம்பர் 31 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. எனவே இதுவரை பிறப்பு சான்றிதழ்வாங்காதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முறையிட்டு பிறப்பு சான்றிதழ் வாங்கிக்கொள்ளலாம்.

கிராம பஞ்சாயத்துகளில் பதிவுசெய்த பிறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசு https://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/PubBirthCertReport.jsp என்ற இணைய பக்கத்தை வெளியிட்டு உள்ளது.

இதில் உள்ளே சென்றதும் பர்த் சர்டிபிகேட் என்ற பக்கம் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். பொதுவாக குழந்தை பிறந்த மருத்துவமனையில் RCHID என்ற பதிவெண்ணை கொடுத்திருப்பார்கள். மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்ததற்கான அடையாளமாக RCHID என்ற சீரியல் நம்பர் கொடுப்பார்கள்.

இந்த நம்பரை அந்த பக்கத்தில் பதிவிட வேண்டும். இதை தொடர்ந்து அதே பக்கத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பரை தரவேண்டும். அதனை தொடர்ந்து பாலினம், வயது , ஊர், பிறந்த தேதி ஆகிய விவரங்களை கொடுக்க வேண்டும் . இதை பதிவு செய்ததும் கீழே உள்ள பிறப்பு சான்றிதழ் காட்டும். அதை நீங்கள் தாரளமாக டவுன் லோடு செய்யலாம். டிஜிட்டல் பிறப்பு சான்றிதழாக அந்த ஆவணத்தை பயன்படுத்தலாம். ஆதார் அட்டை, கல்வி பயில, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஓட்டுநர் உரிமம் வாங்க, பாஸ்போர்ட் விண்ணப்பிக்க , அரசுப் பணிகளில் சேர. திருமணப் பதிவு போன்ற விஷயங்களுக்கு டிஜிட்டல் பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம்.