தனுஷ் என்றாலே விருதுதானா…? அடுத்த விருதைத் தட்டித் தூக்கிய தனுஷ் படம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்

By John A

Published:

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி என எந்த ஹீரோவும் செய்யாத ஹாட்ரிக் வெற்றிகளைக் கொடுத்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் தனுஷ். தனது தந்தையின் பின்புலம் இருந்தாலும் அடுத்தடுத்து இவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்தார்.

சுரேஷ் கிருஷ்ணாவின் பரட்டை என்கிற அழகு சுந்தரம், பாலு மகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் என கைதேர்ந்த இயக்குநர்களின் படங்களில் நடித்து கமர்ஷியல் மற்றும் நடிப்பு இலக்கணத்தைக் கற்றுக் கொண்டார் தனுஷ். இதைத்தவிர அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் சிறந்த பெயரைப் பெற்றுக் கொடுத்தன.

ஒரு பக்கம் கமர்ஷியல் மறுபக்கம் வெற்றிமாறனுடன் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை என அடுத்தடுத்து கமர்ஷியல் சார்ந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் உயரமான இடத்தினைப் பிடித்தார். மேலும் ஆடுகளம் படத்திற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதினையும் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அதேசமயம் மாரி செல்வராஜின கர்ணன் படத்தில் நடித்து தலித் அரசியலையும் தனுஷ் பேசினார்.

ஒரு மாசத்துல கொடுத்துடுறேன்.. திருட்டு போன 60,000 பணம்.. கூடவே இருந்த திருடனின் எமோஷனலான கடிதம்..

இப்படி ஆரம்ப கால படங்கள் கமர்ஷியல் பார்முலாவில் இருக்க அடுத்தடுத்து வந்த படங்கள் மிகவும் பண்பட்ட கதாபாத்திரங்களாகவே அமைந்தன. இதனால் சீயான் விக்ரம் வரிசையில் தனுஷ் இணைந்தார். தற்போது ராயன் வெளிவரத் தயாராகி இருக்கும் நிலையில் அடுத்ததாக இளையராஜா பயோபிக் படத்தினை இயக்கி நடிக்கிறார்.

தனுஷின் படங்கள் பெரும்பாலும் விருதுகளைக் குவித்து வரும் நிலையில் தற்போது கடைசியாக அவர்நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்திற்கும் ஓர் சர்வதேச அங்கீகார விருது கிடைத்திருக்கிறது. சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான இங்கிலாந்து தேசிய திரைப்பட விருதினைப் பெற்றுள்ளது கேப்டன் மில்லர். பேராளியாக தனுஷ் நடித்த இப்படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். தனுஷூடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படமும் வெற்றியைப் பெற்றது. தற்போது கேப்டன் மில்லர் படத்திற்கு விருது கிடைத்திருப்பதால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல திரைப் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.