பலாப்பழ தினம் 2024: ஏன் இந்த நாளை கொண்டாடுகிறார்கள் தெரியுமா…?

By Meena

Published:

மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் ஒன்று தான் பலாப்பழம். இந்த பருவகால பழம் பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்காவின் தேசிய பழமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மாநில பழமாகவும் இந்த பலாப்பழம் விளங்குகிறது. அப்படிப்பட்ட பலாப்பழத்திற்காக ஒரு நாளை ஏன் கொண்டாடுகிறார்கள் மற்றும் அதன் வரலாறு, சிறப்புகள் என்ன என்பதை இனிக் காண்போம்.

தேதி:
பலாப்பழ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கூர்மையான மற்றும் கடினமான வெளிப்புற தோலிற்குள் மிகவும் இனிப்பான சுளைகளை கொண்ட பலாப்பழம் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது. தற்போதைய காலகட்டத்தில் பலாக்காய் கறி வகைகள் இறைச்சிக்கு மாற்றாக பிரபலமடைந்து வருகிறது.

வரலாறு:
15 ஆம் காலகட்டத்தில் இருந்தே மனிதர்களால் பலாப்பழம் சாப்பிடப்பட்டு வந்துள்ளது. போர்த்துகீசிய இயற்கை ஆர்வலர் மற்றும் அறிஞர் 1563 ஆம் ஆண்டு தான் எழுதிய புத்தகத்தில் பலாப்பழத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார். காலனியாதிக்கத்தின் விளைவாக பலாப்பழம் உலகம் முழுவதும் மனிதர்களின் விருப்பமான பழமாக சுற்றி வருகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் jackfruitday.com இணையத்திரனால் பலாப்பழத்தின் பன்முகத்தன்மையை பற்றிய விழிப்புணர்விற்காகவும் கொண்டாட்டத்திற்காகவும் நிறுவப்பட்டது.

முக்கியத்துவம்:
இந்த பலாமரம் வெப்பமான மற்றும் ஈரமான வெப்பமண்டல காலநிலையில் வளரக்கூடியது. உலகத்தின் பல்வேறு உணவு கலாச்சாரங்களில் பலாப்பழம் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. ஜாம், ஊறுகாய், இனிப்புகள், ஐஸ்க்ரீம் என அனைத்திற்கும் பலாப்பழம் பயன்படுகிறது. இந்த பலாகாய் வேக வைத்த உடன் இறைச்சி போன்ற அமைப்பை கொண்டுள்ளதால் இது சைவ சமையலில் இறைச்சிக்கு மாற்றாக முக்கியமாக பயன்படுத்துகிறார்கள். வைட்டமின், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற நிறைய சத்துக்கள் இந்த பலாப்பழத்தில் உள்ளன. அதனால் இந்த பலாப்பழ தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சிறப்புகள்:
அதீத இனிப்புச் சுவையை கொண்ட இந்த பலாப்பழத்தை யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாக இந்த பலாப்பழம் விளங்குகிறது. ஜூன் மற்றும் ஜூலை பலாப்பழ சீசன் ஆகும். இந்த காலகட்டத்தில் பலாப்பழம் எளிதாக சந்தைகளில் கிடைக்கும். இந்த பலாப்பழ தினத்தன்று பலாப்பழத்தை வாங்கி ருசித்தும், பலாக்காயில் புது விதமான சமையலை செய்து குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள்.