டெஸ்லா காரில் குறை கண்டுபிடித்த 7 வயது சீன சிறுமி.. எலான் மஸ்க் அளித்த பதில்..!

By Bala Siva

Published:

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அவர்களுக்கு சொந்தமான டெஸ்லா காரில் சீனாவை சேர்ந்த ஏழு வயது சிறுமி ஒரு குறையை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய நிலையில் அதற்கு எலான் மஸ்க் கூறிய பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி மோலி என்பவர் தான் பயன்படுத்தி வரும் டெஸ்லா எலக்ட்ரிக் காரில் ஒரு சின்ன பிரச்சனை இருப்பதாக சமூக வலைதளத்தில் எலான் மஸ்க் ஐடியை டேக் செய்து வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் எனது பெயர் மோலி, நான் சீனாவை சேர்ந்தவர், உங்கள் டெஸ்லா காரில் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. நான் உங்கள் டெஸ்லா காரில் உள்ள டிஸ்ப்ளேவில் ஒரு வரைபடத்தை வரையும்போது, அதற்கு முன்னர் வரைந்த படம் அழிந்து விடுகிறது. இதை தயவு செய்து சரி செய்யுங்கள் என்று கூறியதோடு, வரைபடத்தை வரையும் போது முந்தைய படம் அழியும் வீடியோவையும் அவர் பதிவு செய்துள்ளார்.

சீன சிறுமிக்கு பதில் அளிக்கும் விதமாக எலான் மஸ்க் ‘நிச்சயமாக’ என்று அந்த வீடியோவுக்கு பதிலளித்துள்ளார். இந்த வீடியோ மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் பெற்றது என்பதும் ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் லட்சக்கணக்கான கமெண்ட்ஸ்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோவில் தோன்றும் சிறுமிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் .

மேலும் சிறுமி கூறிய பின்னர் தான் பலர் தங்கள் டெஸ்லா காரில் உள்ள டிஸ்ப்ளேவில் ஒரு படம் வரையும்போது ஏற்கனவே முன்னர் வரைந்து படம் மறைந்து விடுகிறது என்பதை அறிந்து உள்ளனர். இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்று சிறுமியை அடுத்து பலரும் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் இது குறித்து டெஸ்லா கார் உற்பத்தி பொறியாளர்கள் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு கட்டப்படும் என்று கூறப்படுகிறது.

https://x.com/DriveGreen80167/status/1807485214270099854