நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக தான் அவசர அவசரமாக ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பிலிருந்து அஜித் சென்னை வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஷாலினி அஜித் சற்றுமுன் மருத்துவமனையில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது உண்மைதானோ என்று எண்ண வைக்கிறது.
தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜானில் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென அவர் அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவர் ஒரு தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னை திரும்பி உள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் அவர் மீண்டும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஷாலினி அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதனால்தான் அஜித் அவசர அவசரமாக சென்னைக்கு திரும்பி உள்ளதாகவும் ஷாலினிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஷாலினி அஜித் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் இருந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் ஷாலினியின் கையை அஜீத் அன்புடன் பிடித்திருப்பது போன்று உள்ள நிலையில் எப்போதும் அன்பு பரவட்டும் என்றும் அவர் அதில் பதிவு செய்துள்ளார்.
ஷாலினியின் கையில் மருத்துவமனை அடையாள அட்டை இருப்பதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பது உண்மைதான் என்று தெரிகிறது. இதனை அடுத்து ஷாலினி அவர்கள் விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.