விஜய் டிவி தொகுப்பாளர்களக்கு எங்கேயோ மச்சம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். விஜய் டிவியில் தொகுப்பாளராக, சீரியல் நடிகராக அறிமுகமாகி தன்னுடைய திறமைகளை மெருக்கேற்றிக் கொண்டு அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்று இன்று சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர்.
சந்தானம், சிவகார்த்திகேயன், கவின், ரியோ என அடுத்தடுத்து பலர் இன்று தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த லிஸ்ட்-ல் தற்போது இளம் நடிகரும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அந்த நடிகர் வேறு யாருமல்ல பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வெற்றிவாகை சூடிய ராஜு ஜெயமோகன் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அந்தவகையில் பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் மற்றும் கிராபிக்ஸ் வல்லுநராகவும், இயக்குநர் பிரியாவிடம உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராகவ் மிர்தாத் இயக்கும் புதிய படமான பன் பட்டர் ஜாம் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். திருநெல்வேலியில் பிறந்த ராஜு ஜெயமோகன் கோவையில் கல்லூரிக் கல்வியை முடித்து மாடலிங்கில் ஈடுபட்டார்.
அதன்பின் கடந்த 2012-ல் கனாகாணும் காலங்கள் சீசன் 2 தொடரில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பிக்பாஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் பிரபலம் ஆனார்.
இயக்குநர் ஷங்கரின் நண்பன் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது அதனை சில காரணங்களுக்காக நிரகாரித்திருக்கிறார். தற்போது 32 வயதாகும் ராஜு நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். ராஜு வீட்ல பார்ட்டி என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் மேலும் பிரபலமானார். பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். இப்படி சின்னத்திரையிலும், வெள்ளித் திரையிலும் கலக்கி வரும் ராஜு ஜெயமோகன் தற்போது ஹீரோ அவதாரம் எடுத்திருப்பதால் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.