கே. எஸ். ரவிக்குமார் இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர் ஆவார். இயக்குனர்கள் பாரதிராஜா, விக்ரமன், இ. ராமதாஸ், நாகேஷ், ராமராஜன் மற்றும் கே. ரங்கராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.
ஆரம்பத்தில் 1990 ஆம் ஆண்டு ‘புரியாத புதிர்’ திரைப்படத்தின் வாயிலாக தயாரிப்பாளராக அறிமுகமானார். 1991 ஆம் ஆண்டு சரத்குமாரை வைத்து ‘சேரன் பாண்டியன்’ திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும், அதே படத்தில் வில்லனாக நடித்து நடிகராகவும் அறிமுகமானார் கே. எஸ். ரவிக்குமார்.
தொடர்ந்து 90களில் ‘நாட்டாமை’, ‘முத்து’, ‘அவ்வை ஷண்முகி’, ‘படையப்பா’ போன்ற வணீக ரீதியாக 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்த படங்களை இயக்கியும் தயாரித்தும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இடம் பெற்றார் கே. எஸ். ரவிக்குமார்.
படையப்பா, நாட்டாமை, முத்து போன்ற திரைப்படங்கள் இன்றளவும் காலத்தால் அழியாத எவெர்க்ரீன் படங்களாக உள்ளன. குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை எடுப்பதில் வல்லவர் கே. எஸ். ரவிக்குமார். அதில் ‘சமுத்திரம்’, ‘வில்லன்’, ‘சரவணா’, ‘ஆதவன்’ ஆகிய படங்கள் அடங்கும்.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட கே. எஸ். ரவிக்குமார், படையப்பா பட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கதாபாத்திரத்தை ஜெயலலிதா அம்மாவை மனதில் வைத்து தான் எழுதினேன். அவங்கள மாதிரி பவர்புல் கேரக்டரை பாக்குறது கஷ்டம். என்று கூறியுள்ளார் கே. எஸ். ரவிக்குமார்.