ஒரே பெண் இரண்டு முறை மரணம் அடைந்ததாக பொய் கூறி இன்சூரன்ஸ் கம்பெனிகளை ஏமாற்றி லட்ச கணக்கில் பணம் ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கஞ்சன் ராய் மற்றும் பவித்ரா ஆகிய இரண்டு பெயர்கள் உண்டு என தெரிகிறது. இந்த இரண்டு பெயர்களையும் பயன்படுத்தி அவர் சில இன்சூரன்ஸ் கம்பெனியில் பாலிசி இதை பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் கஞ்சன் ராய் இறந்துவிட்டார் என்று அவரது மகன் இன்சூரன்ஸ் கம்பெனியிடம் மருத்துவர் அளித்த இறப்பு சான்றிதழ், உடல் எரித்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பித்த நிலையில் இன்சூரன்ஸ் கம்பெனிகள் அந்த ஆவணங்களை ஆய்வு செய்து 20 லட்ச ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது. அதேபோல் இன்னொரு இன்சூரன்ஸ் கம்பெனியிடமும் 25 லட்சத்திற்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த நிறுவனமும் அந்த பணத்தை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து பவித்ரா என்பவர் இறந்து விட்டதாக கூறி அவரது கணவர் அதே இன்சூரன்ஸ் கம்பெனியிடம் சென்று சான்றிதழ் தாக்கல் செய்து பணம் பெற விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே அதே முகவரியில் ஒரு பெண்ணுக்கு இன்சூரன்ஸ் பணம் கொடுத்துள்ளதை கண்டுபிடித்த இன்சூரன்ஸ் அதிகாரிகள் ரகசியமாக விசாரணை செய்ததில் இரண்டு பெயர்களும் ஒரே பெண்ணுக்கு உரியது என்றும் அதுமட்டுமின்றி அந்த பெண் இறக்கவே இல்லை என்றும் தலைமறைவாகி இருந்ததையும் கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்து மருத்துவர் கொடுத்த சான்றிதழ் போலி என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தங்களது குற்றத்தை கண்டுபிடித்ததை அறிந்த கஞ்சன் ராய் மற்றும் அவரது குடும்பம் தலைமறைவாகியுள்ளனர். இறப்பு சான்றிதழ் கொடுத்த மருத்துவரும் தலைமறைவாகிவிட்டார்.
ஏற்கனவே இரண்டு இன்சூரன்ஸ் கம்பெனியில் கஞ்சன் ராய் இறந்ததாக கூறி 50 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்ட நிலையில், மீண்டும் அதே பெண் இறந்ததாக கூறி பணத்தை பெற முயற்சிக்கும் போது தான் இந்த முறைகேடு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் குடும்பத்தோடு தலைமறைவாக இருக்கும் கஞ்சன் ராயை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
