ரூ.967 கோடி லாட்டரி பரிசு விழுந்தவரை கண்டுபிடிக்க முடியவில்லை.. இந்த பணம் என்ன ஆகும்?

அமெரிக்காவில் 967 கோடி ரூபாய் லாட்டரி சீட்டு பரிசு விழுந்தவரை கண்டுபிடிக்க வேண்டிய முடியவில்லை என்று கூறப்படும் நிலையில் இந்த பணம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு தடை…

lottery

அமெரிக்காவில் 967 கோடி ரூபாய் லாட்டரி சீட்டு பரிசு விழுந்தவரை கண்டுபிடிக்க வேண்டிய முடியவில்லை என்று கூறப்படும் நிலையில் இந்த பணம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் புழக்கத்தில் உள்ளது என்பதும் அதேபோல் பல வெளிநாடுகளிலும் லாட்டரி சீட்டு வழக்கம் உள்ளது என்பது தெரிந்தது.

அந்த வகையில் அமெரிக்காவில் அவ்வப்போது பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் நடந்த குலுக்கலில் 967 கோடி ரூபாய் பரிசு விழுந்தும், பரிசு விழுந்த நபரை லாட்டரி சீட்டு நிர்வாகத்தினர் தேடி வருகின்றனர்.

அமெரிக்காவை பொருத்தவரை ஒரு லாட்டரி சீட்டு பரிசு விழுந்தவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அந்த பணம் அடுத்த குலுக்கலுடன் இணைக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஏற்கனவே மூன்று முறை லாட்டரி சீட்டு பரிசு விழுந்தவரை கண்டுபிடிக்க முடியாததால் அடுத்தடுத்த குலுக்கலில் இணைக்கப்பட்ட நிலையில் தற்போது உள்ள பரிசுத்தொகை பெற்றவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மெகா குலுக்கலில் 967 கோடி ரூபாய் பரிசு விழுந்த நபர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும், இன்னும் ஒருசில நாளில் யாரும் பரிசுத்தொகைக்கு உரிமம் கோரி வரவில்லை என்றால் அடுத்த குலுக்கலில் இந்த ஜாக்பாட் தொகை சேர்ந்து விடும் என்றும் அடுத்த குலுக்கலில் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு அதிகமாக பரிசுத்தொகை வரும் என்று கூறப்படுகிறது.

ஒரு கோடி ரூபாயை தன் வாழ்நாளில் பார்ப்போமா என்று கோடிக்கணக்கான மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் 967 கோடி ரூபாய் தேடி வந்த போதும் அந்த நபர் யார் என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளது.