10 ரூபாய் அதிகமாக கேட்ட ஆட்டோ டிரைவர் கொலை.. ஆயுள் முழுவதும் சிறையில் பயணி..!

பத்து ரூபாய் அதிகமாக கேட்ட ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது ஆட்டோவில் பயணம் செய்த பயணி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க…

auto

பத்து ரூபாய் அதிகமாக கேட்ட ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது ஆட்டோவில் பயணம் செய்த பயணி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெறும் பத்து ரூபாய்க்காக ஒரு உயிர் பலியானது மட்டும் இன்றி இன்னொருவர் ஆயுள் முழுவதும் சிறைச்செல்ல இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பயணியை ஏற்றி சென்ற நிலையில் அவர் இறங்கும் இடம் வந்ததும் பத்து ரூபாய் அதிகமாக கேட்டு உள்ளார். ஆனால் அதற்கு அந்த பயணி கொடுக்க மறுத்ததாகவும் இதை அடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதாகவும் அப்போது பயணி வேகமாக அடித்ததால் ஆட்டோ டிரைவர் கீழே விழுந்ததாகவும் அவர் மயக்கம் அடைந்த நிலையில் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஆட்டோ டிரைவரை அடித்த பயணி தப்பிச் செல்ல முயன்ற போது அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கும் சில காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு பயணிக்கு பாதகமாக வந்தால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. வெறும் பத்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதும், அவரை கொலை செய்தவர் ஆயுள் முழுவதும் சிறையில் தண்டனை அனுபவிக்க இருப்பதும் பெரும் சோகத்திற்கு உரியதாக கருதப்படுகிறது.