வியாழக்கிழமை இரவு இத மட்டும் மறக்காம செய்யுங்க.. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தானா வீட்டுக்கு வரும்..

By John A

Published:

பொதுவாகவே ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நமது முன்னோர்கள் வாரத்தின் ஒவ்வொரு கிழமைகளிலும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது எனப் பகுத்து ஆராய்ந்து கூறியுள்ளனர். அந்த நாட்களில் முன்னோர்கள் சொன்னதைக் கடைப்பிடித்து வந்தால் நம் வாழ்வில் ஏற்றமும், வளமும் கிட்டும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் வாரத்தில் வெள்ளிக்கிழமை என்பது சற்று ஸ்பெஷலான நாள் தான். ஏனெனில் அனைத்து விதங்களிலும் வெள்ளிக்கிழமை கடைசி நாளாக இருக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமை பெரும்பாலும் ஓய்வு நாளாகத் தான் இருக்கிறது.

மேலும் இந்து மத நம்பிக்கையைப் பொறுத்தவரை வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அந்த நாட்களில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விஷேசமாக இருக்கும். அந்நாட்களில் பெண்கள் தலைக்குக் குளித்து அம்மன் கோவில் சென்று வருவார்கள்.

மேலும் வீடுகளையும் சுத்தப்படுத்தி அம்மனை வணங்குவர். இவ்வாறு வெள்ளிக்கிழமை சிறப்பானதாகக் கருதப்படும் வேளையில் வீட்டில் செல்வத்தைக் கொடுக்கும் மகாலட்சுமியை நிரந்தரமாக வாசம் செய்யும் இடமாக மாற்ற சில வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.

கங்கை நதியில் வரலாறு காணாத மாற்றம்.. வாரணாசியில் நடந்த விசித்திரம்.. அதிர்ந்த பக்தர்கள்

வியாழக்கிழமை இரவே அன்று எந்த எச்சில் பாத்திரங்களும் இல்லாமல் சுத்தமாகக் கழுவி எடுத்து வைத்து விட வேண்டும். பொதுவாகவே எச்சில் பாத்திரங்கள் நெடுநேரம் கழுவாமல் இருந்தால் அது வீட்டிற்கு ஆகாது என்பது ஐதீகம். எனவே பயன்படுத்திய பாத்திரங்கள் அனைத்தையும் சுத்தமாகக் கழுவிய பின் சமையலறையை சற்று சுத்தப்படுத்த வேண்டும்.

குறிப்பாக தூசு, ஒட்டடை போன்றவை இருப்பின் அதனைச் சுத்தம் செய்ய வேண்டும். அதுமட்டுமன்றி நாம் பயன்படுத்தும் பொருட்களான அஞ்சறைப் பெட்டி, அரிசி பானை, பணம் வைக்கும் இடம்போன்றவற்றிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு விடவேண்டும். அது முடிந்த பின் சமையல் செய்யும் இடத்தில் பச்சரிசி மாவு, மஞ்சள் கலந்து சிறிய கோலம் போட்டு வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்த முடித்தபின் மறுநாள் காலை வழக்கம் போல எழுந்தவுடன் குளித்துவிட்டு மகாலட்சுமியை வேண்டி பாலைக் காய்ச்சி பால் பொங்கி வரும் போது நம் வீட்டிலும் செல்வம் பொங்கிவரும் என்பது ஐதீகம். இதனை நாம் முறையாகக் கடைப்பிடித்து வரும் போது வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்கி செல்வ வளம் பெருகும். மேலும் தினசரி மாலை வேளையில் வீட்டில் சிறிது நேரம் விளக்கினை ஏற்றி வழிபட்டாலே அனைத்து எதிர்மறை துஷ்ட சக்திகளும் நீங்கி வீட்டில் மகாலட்சுமி அருள் கண்டிப்பாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.