மிர்சா அப்பாஸ் அலி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் அப்பாஸ் கொல்கத்தாவில் பிறந்து, மும்பையில் வளர்ந்து, பெங்களூரில் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர்.
கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் செய்தார் அப்பாஸ். 1994 ஆம் ஆண்டு நடந்த ‘பேஸ் ஆப் 94’ மாடலிங் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றிப் பெற்றார். இதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அப்பாஸ்.
1996 ஆம் ஆண்டு ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் அப்பாஸ். இப்படத்தில் அப்பாஸுடன் வினீத் மற்றும் தபு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. மேலும் இப்படத்தின் ‘முஸ்தபா முஸ்தபா’ பாடல் மெகாஹிட் ஆனது.
முதல் படமே வெற்றிப் படமாக அப்பாஸுக்கு அமைந்தது. அது முதல் இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வந்தார் அப்பாஸ். ‘ஆனந்தம்’, ‘படையப்பா’ போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்த அப்பாஸுக்கு 2000 களின் நடுப்பகுதியில் சினிமாவை விட்டு காணாமல் போனார்.
இதைப் பற்றி தற்போது மனம் திறந்து பேசிய அப்பாஸ், பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த பின்பும் எனக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து ஒரு கட்டத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் வணீக ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டேன். அப்போது தான் ஹார்பிக் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நண்பர்கள் எல்லாரும் அந்த விளம்பரத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. என் வீட்டின் டாய்லெட் எப்படி சுத்தமா இருக்கணும்னு நினைப்பேனோ அது மாதிரி தான் இதுவும் சுத்தம் செய்யற கம்பெனி விளம்பரம் தான் அப்படினு நடித்தேன்.
அதோடு மட்டுமல்லாமல் அந்த விளம்பரத்தில் நடித்ததற்காக எனக்கு 8 வருடங்கள் அதிலிருந்து வருமானம் வந்தது. அது எனக்கு உதவியாக இருந்தது என்று பகிர்ந்துள்ளார் அப்பாஸ்.