கடிகாரத்தை தப்பி தவறி கூட இந்த திசையில் மாட்டீறாதீங்க.. எமனின் திசை

By Keerthana

Published:

சென்னை: கடிகாரம் மாட்டும் திசை எது தெரியுமா? நம்முடைய வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் மாட்டி வைத்தால் செல்வம் கொட்டும் என்பதை பார்ப்போம்.

நமது வீட்டில் வைக்கப்படும் கடிகாரத்திற்கு வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய சக்தி இருக்கிறது. எந்த திசையில் கடிகாரத்தை மாட்டி வைத்தால் என்ன மாதிரியான பலன்கள் நடைபெறும் என்பதுகுறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

கடிகாரம் என்பது உண்மையில் உயிரோட்டமுடையது. எப்போதுமே ஓடிக்கொண்டே தான். இந்த நொடி, இந்த நிமிடம் இப்படியே தொடராது.. எல்லாமே நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கும். நமது வீடுகளில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சுவற்றில் ஓடாத கடிகாரத்தை மாட்டி வைக்கக்கூடாது. அதே போல கண்ணாடியில் விரிசல் விட்ட உடைந்த கடிகாரத்தையும் எந்த காரணம் கொண்டும் மாட்டி வைத்திருக்கக் கூடாது.

ஒருசிலரின் வீட்டில் கடிகாரத்தின் வேகத்தை நேரத்தை அதிகமாக வைத்திருப்பார்கள். ஆனால் அப்படி வைக்கக்கூடாது. நாம் கடிகாரத்தை சரியான நேரத்தை காட்டும் வகையில் வைத்திருக்க வேண்டும். ஒருபோதும் கடிகாரத்தை தாமதமாக ஓட விடக்கூடாது அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்து பண வருமானத்தை குறைக்கும் என்கிறார்கள்.

கடிகாரத்தை மாட்டுவதற்கு என்று சில குறிப்பிட்ட திசைகள் உள்ளன. எந்த திசையில் கடிகாரத்தை மாட்ட வேண்டும் . உங்கள் வீட்டில் ஊசல் கடிகாரங்கள் இருக்கிறது என்றால் அதனை கிழக்கு திசை சுவற்றில் மாட்டி வைக்கலாம்.

உங்களுடை ய வீட்டில் செல்வ செழிப்பு மேலும் அதிகரிக்கும் . கிழக்குத் திசை என்பது சொர்க்கத்தின் அதிபதி இந்திரனின் திசை. இந்திரன் தேவாதி தேவன் தேவர்களுக்கெல்லாம் தலைவன். குபேரன், வாயு, வருணன், அக்னி என அனைவரும் இந்திரனுக்குள் அடக்கம் என புராணங்கள் சொல்கின்றன.

நம்முடைய வீட்டில் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்க வேண்டும் என்றால் உங்களுடைய வீட்டில் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாற்றுங்கள். கிழக்குப்பக்க சுவற்றில் நீங்கள் மாட்டும் கடிகாரத்தை வட்ட வடிவில் அல்லது சதுர வடிவில் மாற்றிக் கொள்ளலாம்.

அதேபோல் வீட்டில் கடிகாரம் வடக்கு திசையிலும் வைக்கலாம். வடக்கு திசை குபேரன் ஆளும் திசை. வடக்கு சுவற்றில் மாட்டும் கடிகாரம் தெற்கு பார்த்து இருக்க வேண்டும். வடக்கு சுவற்றில் கடிகாரம் மாட்டினால் செல்வ வளம் பெருகும். பொருளாதார நிலை உயரும். பண கஷ்டம் நீங்கும். வடக்கு திசை சுவற்றில் மாட்டி வைக்கும் கடிகாரம் வட்ட வடிவத்தில் இருப்பது நல்லது என்கிறார்கள்..

கிழக்கு மற்றும் வடக்கு பக்க சுவர்களில் கடிகாரத்தை மாட்ட முடியாதவர்கள் மேற்கு சுவற்றில் கடிகாரத்தை மாட்டி வைக்கலாம். ஒருபோதும் தெற்கு சுவரில் கடிகாரத்தை மாட்டி வைக்க வேண்டாம். தெற்கு திசை எமனின் திசை. நம்முடைய முன்னோர்கள் வாழும் திசை.

எனவே தெற்கு திசையில் மாட்டி வைக்கும் கடிகாரம் நம்முடைய மறைந்த முன்னோர்களையும் எமதர்ம ராஜாவையும் தொந்தரவு செய்யும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். எனவே தெற்கு திசையில் மாட்டி வைக்கக்கூடாது என்கிறார்கள். அப்படி மாட்டினால் உங்களுக்கு நல்ல நேரம் வராமலேயே போய் விடும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். அதேபோல் கடிகாரத்தை வாசலுக்கு வெளியே, பால்கனியில் கடிகாரங்களை மாட்டி வைக்கக்கூடாது.