முதல் இந்திய கேப்டன்.. தோனி, கோலிக்கு கிடைக்காத மகுடம்.. அசால்டாக தட்டித் தூக்கிய ரோஹித்..

By Ajith V

Published:

தோனி ஒரு காலத்தில் இந்திய அணியை கட்டி ஆண்டு கொண்டிருந்த நிலையில் அவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வினை அறிவிப்பதற்கு முன்பாகவே புதிய கேப்டனாக கோலி அனைத்து வடிவிலும் இந்திய அணியை தலைமை தாங்கி வந்தார்.

அவரது தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளையும் இந்திய அணி உருவாக்கி இருந்ததையடுத்து ரோஹித் ஷர்மாவிற்கும் இந்திய அணியை தலைமை தாங்கும் பொறுப்பு கிடைத்திருந்தது. அவர் மிக ஆக்ரோஷமாக அதே நேரத்தில் எப்படி வீரர்களுக்கு ஆதரவு கொடுத்து அவரை தேற்ற வேண்டுமோ, அதே வகையில் உத்வேகத்தையும் கொடுத்து அவர்களை மிகச் சிறந்த முறையில் தயாராக்கி வருகிறார்.

இதனால் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி சிறந்து விளங்குவதற்கு ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது மட்டும் ஒரு குறையாக இருந்தாலும் மற்ற அனைத்து தொடர்களிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படவும் ரோஹித் கடினமாக உழைத்து வருகிறார்.

கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பைத் தொடர்களில் இறுதி போட்டி வரை இந்திய அணி முன்னேற முக்கிய பங்கு வகித்தது ரோஹித் ஷர்மாவின் தலைமை. தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை அரைஇறுதி போட்டியிலும் இந்திய அணி முன்னேறி உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த போட்டி நடைபெற உள்ள நிலையில் அவர்களை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினால் ஆப்கானிஸ்தான் அல்லது தென்னாபிரிக்கா ஆகிய இரு அணிகளில் ஒன்றை சந்திக்க நேரிடும்.

இதனால் இந்த இரண்டு போட்டிகளையும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் 17 ஆண்டுகள் கழித்து டி20 உலக கோப்பையை வெற்றி பெறவும் இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது. மேலும் கபில் தேவ், தோனி ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்திய அணிக்கு ஐசிசி கோப்பையை வென்று கொடுத்த பெருமையும் ரோஹித்திற்கு கிடைக்கும்.

கடந்த ஆறு போட்டிகளில் எப்படி வெற்றி பெற்றார்களோ அதனை தொடர்ந்தாலே நிச்சயம் உலக கோப்பையை தட்டி தூக்கி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு சூழலில் கோலி, தோனி என டி20 உலக கோப்பையில் இந்திய அணி வழிநடத்திய எந்த கேப்டனுக்கும் கிடைக்காத பெருமையை தற்போது பெற்றுள்ளார் ரோஹித் ஷர்மா.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் 91 ரன்கள் அடித்து அசர வைத்திருந்தார் ரோஹித் ஷர்மா. இவரது ஆட்டத்தினால் இந்திய அணியும் வெற்றி பெற, ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் டி20 உலக கோப்பையில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையும் ரோஹித் ஷர்மாவுக்கு தற்போது கிடைத்துள்ளது.