டெல்லி: லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை தரப்போகிறது. இந்த மாதம் உயர்த்தப்பட உள்ள அகவிலைப்படி உடன் 18 மாதங்களுக்கான டிஏ அரியர் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான தொகையை மத்திய அரசு ஒதுக்க உள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போது 46 சதவிகிதமாக உள்ள டிஏ 50 ஆக உயரப்போகிறது. இந்த டிஏ உயர்வு என்பது ஜூலை மாதம் வரும் என்கிறார்கள். அதேபோல் டிஏ அறிவிப்பின் போது, 18 மாத நிலுவை அரியர் தொகையும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாம். இதன் காரணமாக சீனியர் ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி கிடைக்க வாய்ப்பு உள்ளதாம். இதன் மூலம் சுமார் 2 கோடி குடும்பங்கள் பயன் பெறும் என்கிறார்கள்.
இது ஒருபுறம் எனில் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 4045 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்றப்பட உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும். அத்துடன் சம்பளத்தில் 14% அரசு பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்தது கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படுகிறது.
அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் தரும் வகையில் இருந்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைத்து வருகீறது.. இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். அப்படி செய்தால் 40 முதல் 45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது,
இது போக மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வோடு சேர்த்து எச்ஆர்ஏ உயர்வும் இருக்கும். மத்திய அரசில் பணிபுரியும் எல்லா பிரிவிற்கும் தலா 3 சதவிகிதம் து எச்ஆர்ஏ உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்த்தப்பட்டால் தமிழக அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அதை பின்பற்றி அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அரசு ஊழியர்களுக்கு அதிகமாக உள்ளது.