மரண படுக்கையில் மலேசியா வாசுதேவனின் கடைசி ஏக்கம்… இளையராஜா இப்படி பண்ணிட்டாரே…

By Meena

Published:

கேரளத்தை பூர்வீகமாக கொண்ட வாசுதேவன் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். இளம் வயதில் மலேசியாவில் நாடங்கங்களில் நடித்த வாசுதேவன் அந்த அனுபவத்தைக் கொண்டு சினிமாவில் ஆர்வம் கொண்டு சென்னைக்கு வந்தார். மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்து திரையுலகில் பணிபுரிந்ததால் மலேசியா வாசுதேவன் என்று அழைக்கப்பட்டார்.

மலேசியா வாசுதேவன் தென்னிந்திய பின்னணி பாடகரும் நடிகரும் ஆவார். இவர் 8000த்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியன் அவரைகளை போலவே இவரின் பாடல்களையும் மக்கள் ரசித்தனர். தனது கணீர் குரலுக்காக ரசிகர்களைக் கொண்டவர்.

‘பொல்லாத உலகில் ஒரு போராட்டம்’ என்ற படத்தில் ‘பாலு விக்கிற பத்தம்மா’ என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்ததாக கமலஹாசன் நடித்த ’16 வயதினிலே’ படத்தில் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடலை பாடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் மலேசியா வாசுதேவன்.

தமிழ் சினிமாவின் பல வெற்றிப் பாடல்களை பாடியுள்ளார் மலேசியா வாசுதேவன். இதுதவிர பல திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து புகழடைந்தவர் மலேசியா வாசுதேவன். இவரின் மகனான யுகேந்திரன் தமிழ் சினிமாவின் பின்னணி பாடகர் மற்றும் நடிகர், இவரது மகள் பிரஷாந்தினி பின்னணி பாடகி என்பது குறிபிடத்தக்கது.

இந்நிலையில், பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இறுதி நாட்களை கழிக்கும் போது இசைஞானி இளையராஜா அவர்களை கடைசியாக பார்க்கவேண்டும் என்ற ஏக்கம் கொண்டிருந்தாராம். ஆனால் இளையராஜா சென்று அவரை பார்க்கவில்லையாம். இளையராஜா அவர்களின் மனைவி மற்றும் மகன் கார்த்திக் மலேசியா வாசுதேவனை பார்க்க வந்த போது சொல்லி அனுப்பினர்களாம். பின்னர் இறுதியாக மலேசியா வாசுதேவன் இறக்கும் நாள் அன்று தான் வந்து பார்த்தாராம் இளையராஜா.