நான் முரட்டுத்தனமாக இருக்கிறதுக்கு இதுதான் காரணம்… சுஜா வருணி ஆதங்கம்…

By Meena

Published:

சுஜா வருணி தென்னிந்திய துணை மற்றும் குணசித்திர நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். தனது பதினான்கு வயது முதலே திரையுலகில் நுழைந்து நடிக்க ஆரம்பித்தவர்.

2002 ஆம் ஆண்டு சுஜா வருணி தனது பதினான்கு வயதில் ‘பிளஸ் டூ’ என்ற காதல் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். 2004 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடித்த ‘வர்ணஜாலம்’ திரைப்படத்தில் நடனம் ஆடும் வாய்ப்புக் கிடைத்தது .

2000 களின் நடுப்பகுதியில் கவர்ச்சியான ஒற்றைப் பாடல்களில் நடனம் ஆடி பிரபலமானார் சுஜா வருணி. இது தவிர ‘பள்ளிக்கூடம்’, ‘குசேலன்’, ‘ஜெயம்கொண்டான்’ போன்ற திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார் சுஜா வருணி. ‘மிளகா’, ‘வேட்டை’, ‘அப்புச்சி கிராமம்’, ‘கிடாரி’ போன்ற திரைப்படங்களில் கிராமிய வேடங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்றவர்.

இதுதவிர சின்னத்திரை விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு சிறப்பாக விளையாடினர். தொடர்ந்து ‘பிபி ஜோடிகள்’ நிகழ்ச்சியில் தனது கணவனுடன் பங்கேற்று அந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆனார். சின்னத்திரை தொடர்களிலும் பங்கேற்றவர் சுஜா வருணி. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேரனான சிவக்குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட சுஜா வருணி தனது குடும்பத்தை பற்றியும் தனது அம்மா பட்ட கஷ்டங்களைப் பற்றியும் பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், நாங்க 3 பெண் பிள்ளைகள், அம்மாக்கும் எங்களுக்கும் சோறு போட முடியாம ஏன் அப்பா விட்டுட்டு போய்ட்டார். அம்மா தான் டீ, போண்டா, வடை வித்து ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. அதனால தான் ஆம்பளைங்கள ரொம்ப பிடிக்காது, நான் ரப் அண்ட் டப் ஆகவும் முரட்டுத்தனமாகவும் இருக்கிறதுக்கு அதுதான் காரணம் என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார் சுஜா வருணி.