தோஷம் என்ற பெயரில் ஏமாற்றிய ஜோசியர்கள்

ஜோசியத்தை நம்பும் வழக்கம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஜோசியத்தை நம்பி பணம், நகைகளை பறிகொடுத்த பெண்கள் பற்றி கேட்டு பலரும் அதிர்ந்து உள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புலிப்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை; அவரது மனைவி வெள்ளப்பொண்ணு; இவர்களுக்கு ராமர் என்ற மகன் உள்ளார். ராமர் காதலித்து மீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராமர் மீனா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

c0e2ff86e089e59112ded45f558b828b-1

கடந்த வாரம் ராமரை நாய் கடித்திருக்கிறது. அவர்கள் வீட்டிற்குள் பாம்பு வந்துள்ளது. இதனையெல்லாம் அபசகுணமாக எண்ணியுள்ளனர்.

அண்ணாதுரையும் ராமரும் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் வெள்ளப்பொண்ணும் மீனாவும் இருந்தபோது கிளி ஜோசியம் பார்க்க என்று இருவர் வெள்ளப்பொண்ணுவின் வீட்டினுள் நுழைந்தனர். வெள்ளப்பொண்ணும் மீனாவும் அவர்களின் நிலையை கூற அவர்கள் மீனாவிற்கு தாலி தோஷம் என்றும் அதனை தீர்த்து வைப்பதாகவும் கூறியுள்ளனர்.

வெள்ளப்பொண்ணும் மீனாவும் அதனை நம்பி இருவரும் தோஷம் நீங்க 5000 ரூபாய் கொடுத்தனர். பூஜையின் போது தங்கநகைகளை அணிந்திருக்க கூடாது என கூறியுள்ளனர். இருவரும் அனைத்து நகைகளையும் கழட்டி அவர்களிடம் கொடுத்துள்ளனர்.

போலி ஜோசியர்கள் இருவரிடமும் அரிசியைக் கொடுத்து வெள்ளப்பொண்ணுவை 288 அரிசி வரும்வரையும் மீனாவை 287 அரிசி வரும்வரை எண்ணச் சொல்லிவிட்டு தோஷத்தின்போது இருவரின் தலையிலும் முக்காடு போட்டுவிட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

சுடுகாட்டிற்கு சென்று உருவ பொம்மை வழிப்பாட்டிற்காக நாங்கள் செல்கிறோம் என கூறிவிட்டு ஏமாத்தி சென்றனர். போலீசார் தீவிரமாக இரு போலி ஜோசியர்களையும் தேடி வருகின்றனர். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews