சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் என்பதைத் தாண்டி தன்னகத்துள் பல சாதனைகளைக் கொண்டு கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. தென்னிந்தியாவின் நுழைவாயிலான சென்னை, இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் ஆகும்.
1996 வரை இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. ஏறக்குறைய ஒரு கோடி மக்கள் வாழும் இந்நகரம், உலகின் பெரிய மாநகரங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் 2 வது நீளமான கடற்கரை ஆகும். சென்னை கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் முதன்மை இடமாக விளங்குகிறது.
பிழைக்கவே மாட்டான்னு சொல்றவங்க கூட சென்னை வந்தா பிழைச்சுப்பாங்க, ஏன்னா அவ்வளவு தொழிற்சாலைகளும், தொழில் துறை வாய்ப்புகளையும் கொண்டு அனைவரையும் வாழவைக்கிறது சென்னையின் பொருளாதாரம் பலவகையான தொழில்களைச் சார்ந்தது. தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தரமணியில் உள்ள டைடல் பூங்காஇந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும்.
இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. பெரம்பூரில் இயங்கிவரும் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை இந்திய ரயில்வேயின் முதன்மையான ரயில் உற்பத்தி தொழிற்சாலையாகும். அம்பத்தூர் மற்றும் பாடி பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. டி.வி.எஸ், அசோக் லேலண்ட், ஹுண்டாய் , ஃபோர்டு , எம்.ஆர்.எஃப், பி.எம்.டபிள்யூ , ரினல்ட் நிசான் போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னையில் உள்ளன.
தமிழகத் தலைமைச்செயலகம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது. அது 13 மார்ச் 2010 அன்றிலிருந்து ஓமந்துரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பசுமை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியானது ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது.