ஆசிரியர் தினமானது ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது ஏன் கொண்டாடப்படுகிறது என்று பார்த்தோமானால் ஒரு ஆசிரியராக இருந்து பின்னாளில் இந்திய குடியரசுத்தலைவராக உயர்ந்த மேதகு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையே நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
சர்வபள்ளி என்பது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஒரு ஊராகும். இவ்வூரில் இவர் பிறந்ததால் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என அழைக்கப்பட்டார்.
சிறுவயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய ராதாகிருஷ்ணன், தத்துவவியலை பாடமாகக் கொண்டு பி. ஏ. பட்டம் பெற்றார், பின்னர் அதே துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர்.
சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார்.
ஹிந்து மத இலக்கியங்கள் மட்டுமல்லாது அனைத்து மத இலக்கியங்களையும் சிறப்புக்களையும் மிக ஆழமாக படித்து வைத்திருந்தார். அதை மக்களிடத்திலும் வெளிப்படுத்தினார்.
இப்படியாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தனது திறமையால் அறிவால் அனைவராலும் கவரப்பட்டு ஆக்ஸ்போர்டு பல்கழைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
பனாரஸ் பல்கழைக்கழக துணைவேந்தர், ஆந்திர பல்கழைக்கழக துணைவேந்தராக பதவி வகித்த இவர் யுனெஸ்கோ தூதுவராகவும் இருந்தவர்.
தனது விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் உயர்ந்து இந்திய நாட்டின் உயரிய பதவியான குடியரசுத்தலைவராகவும் ஆனவர் இவர்.
அறிவாற்றல் உள்ளவர்கள், திறமையானவர்கள், கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தியாவின் உயரிய பதவியை அடைய முடியும் என நிரூபித்தவர் இவர்.
சாதாரண ஆசிரியராக இருந்து உயரிய பதவியை அடைந்ததால் வருடம் தோறும் இவரது பிறந்த நாள் ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நாளை ஆசிரியர் செப்டம்பர் 5- 2019 அன்று இந்தியாவில் ஆசிரியர் தினம் கடை பிடிக்கப்படுகிறது