கடந்த பல வருடங்களாக பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பில் மாணவர்கள் அனைவரும் ஜெயித்து விட வேண்டும் யாரும் தோல்வியடைந்து விடக்கூடாது என பல பள்ளிகள் நினைக்கின்றன. நல்ல நினைப்புதான் தவறில்லை ஏனென்றால் பெரும்பாலான மாணவர்களுக்கு கணிதமும், ஆங்கிலமும் சுட்டுப்பட்டாலும் வராது. கணிதம் வராத மாணவர்கள் அதிகம் உள்ளனர்.
பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பில் எல்லா மாணவர்களும் தேர்ச்சியடைய வேண்டும் என ஆசிரியர்கள் தீவிரமாக செயல்படுவர். வாரத்தின் இரண்டு விடுமுறை நாட்களும் சிறப்பு வகுப்பு வைப்பர்
கணிதம், ஆங்கிலப்பாடத்தை தீவிரமாக எடுப்பர். இந்த வருடங்களில் ஆசிரியர்களுக்கும் ஓய்வில்லை மாணவர்களுக்கும் ஓய்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு பெரிய விசயமானாலும் சிறிய ஓய்வு இருந்தால்தான் ஒரு மாணவனால் அடுத்த கட்ட முயற்சிகளுக்குள் செல்ல முடியும்.
தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பதும் நற்பலனை தராது.அவன் மூளையை சோர்வடைய செய்யும்.
கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும் என்பதற்காகத்தான் பள்ளிக்கூடத்தில் விளையாட்டு பீரியட் செயல்படுகிறது.
ஒரு மணி நேரமோ அரைமணி நேரமோ விளையாடுவதால் அவன் படித்த பாடத்தை மறந்து விடப்போவதில்லை. அவனை பூஸ்ட் செய்ய உதவுவதுதான் விளையாட்டு.
ஆனால் நான் சொல்லும் இந்த குறிப்பிட்ட 10 வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் வருடங்களில், கணித ஆசிரியர்கள் பலர் விளையாட்டு ஆசிரியரிடம் அனுமதி பெற்று விளையாட்டு வகுப்பையும் சேர்த்து எடுத்து கொள்வர்.
உதாரணமாக மதியம் ஒரு 45 நிமிடம் கணித வகுப்பு முதலில் தொடங்குகிறது என்றால் அடுத்தடுத்து இரண்டு வகுப்புகள் விளையாட்டு வகுப்புகளாக இருக்கும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இப்படி இருக்கும்.
அதை மொத்தமாக விளையாட்டு ஆசிரியரிடம் அனுமதி பெற்று கணித பாடம் நடத்துகிறேன் என 3மணி நேரத்துக்கு மேல் நம்மை சோர்வடைய வைப்பது பல வருடமாக நடந்து வருகிறது.
இது பொதுவாக எல்லா ஊர் பள்ளிகளிலும் நடக்க கூடிய விசயமாகும். இது போன்ற விசயங்கள் அப்பாடத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தாது. மறைமுக எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனென்றால் படிப்புக்கு நடுவே சில மணி நேரம் விளையாடுவதால் அவனுடைய எனர்ஜி, அவனுடைய மனவளம், அறிவு அனைத்தும் கூடுமே தவிர ஒரு போதும் குறையாது.
இனி வரும் நாட்களிலாவது இது போல கடின முறைகளை தவிர்த்து மாணவர்களை விளையாட வைத்து பின்பு ஆசிரியர்கள் படிக்க வைப்பது அவசியமான ஒன்றாகும்.
நாளை ஆசிரியர் தினம் இந்த நல்ல நாளில் இந்த உறுதிமொழியை ஆசிரியர்கள் ஏற்றால் சிறப்பு.