தீபாவளி கொண்டாடப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன, அதைப் போல் தீபாவளி ஏன் அனைவருக்கும் மிகவும் பிடிக்கிறது என்பதற்கும் பல காரணங்களே உள்ளன.
தீபாவளி என்பது குடும்பங்களின் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது, அவரவர் பிறந்தநாளுக்கு புதுத் துணிகள் எடுப்பது என்பது மேற்கத்திய கலாச்சாரம், ஆனால் குடும்பத்தின் பொது விழாவிற்கு புதுத் துணி எடுத்தல் என்பது தீபாவளிக்கே எடுக்கப்படும்.
பொங்கல் நம் பாரம்பரிய பண்டிகை என்றாலும், நாம் கடவுளுக்கு நன்றிகளை அந்த நாட்களில் செலுத்துவோம், நம்முடைய உழவர்களுக்கும், கால்நடைகளுக்கும் நன்றிகள் சொல்லும்விதமாக படையல் இட்டு வழிபடுவோம்.
ஆதலால் நம் பாரம்பரிய விழா, நன்றி செலுத்தும் விழாவாக உள்ளது, இதுவே தீபாவளியைப் பொறுத்தவரை நன்றி செலுத்துதலை விட கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பட்டாசு, புதுத் துணி, பலகாரங்கள், எண்ணெய்க் குளியல் என வீடு மட்டுமல்லாது ஊரே களை கட்டும். இதனால் தானோ என்னவோ, குழந்தைகளை தங்களுடைய பிறந்தநாள் கொண்டாட்டம் போல் எண்ணி எதிர் பார்த்து இருந்து கொண்டாடுகின்றனர்.
வீடுகள் மட்டுமல்லாது பட்டாசு, துணி, பலகாரங்கள் கடைகளும் கூட தீபாவளியன்றே களை கட்டும்.