தீபாவளியை தீப ஒளித்திருநாள் என்றும் அழைப்பர். தீபாவளி அன்று தீமை அகன்று நன்மை பிறக்கும் என்ற ஐதீகம் இன்றும் மக்களிடத்தில் இருந்து வருகிறது.
தீபாவளி இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளில் கொண்டாடப் படுகிறது. இலங்கை, நேபாளம், மலேசியா போன்ற பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி ஒன்றாகும். தீபாவளி மிகவும் சிறப்பான விழாவாகும். தீபாவளியை பெண்கள் பலகாரங்கள் செய்தும், இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும் சிறப்பாக கொண்டாடுவர்.
தீபாவளி அரசு விடுமுறைகளில் ஒன்றாகும். தீபாவளி அன்று வீடுகளில் விளக்கினால் அலங்கரித்து வீடெங்கும் ஒளியாக ஜொலிக்கும். பின்னர் மத்தாப்பு, வான வேடிக்கைகள், தரைச்சக்கரம் போன்றவற்றினை வெடித்து மகிழ்வது வழக்கம் ஆகும்.
தீபாவளியை அனைத்து தர மக்களும் கொண்டாடுவார்கள். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், பரிசுகள் பரிமாறியும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.