தீபாவளி கொண்டாடப்படும் முறைகள்!!!!

By Staff

Published:

தீபாவளி  பண்டிகை என்பது ஒருநாள் பண்டிகை கிடையாது, இது 2 நாள் பண்டிகை ஆகும். ஆனால் சில இடங்களில் 5 நாள் வரையிலும் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தினைப் பொறுத்தவரை 2 நாட்களில் கொண்டாடப்படுகிறது, அதாவது தீபாவளி ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசையன்று கொண்டாடப்படுகிறது.

அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர், பின்னர் நல்லெண்ணெய் கொண்டு எண்ணெய்க் குளியல்  செய்வர். முந்தைய காலத்தில் ஆற்றிற்கு சென்று குளித்து வருவர்.

அதன்பின்னர் கடவுள் முன்  புத்தாடைகளை வைத்து மஞ்சள், குங்குமம் இட்டு சாமி கும்பிட்டு அதனை  உடுத்துவர்.

அடுத்து புதுத் துணியோடு பட்டாசுகள் வெடிப்பர், அதன்பின்னர் செய்துவைத்த பலகாரங்கள் கொண்டு, சாதத்துடன் உணவுகளை படைப்பர். அந்த நாள் அமாவாசை என்பதால் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை சமைக்க மாட்டார்கள்.

இனிப்புக்கள்  செய்து அண்டை வீட்டாருக்கு பரிமாறுவர். தீபாவளி முடிந்த அடுத்தநாளும் இந்த பண்டிகை தொடரும், அதாவது அந்த 2 வது நாள் அசைவ உணவுகளை சமைத்து பரிமாறுவர்.

Leave a Comment