நான் உடல் எடையை குறைத்ததற்கான உண்மையான காரணம் இதுதான்… சிம்பு பகிர்வு…

By Meena

Published:

சிலம்பரசன் என்கிற சிம்பு இயக்குனரும் நடிகருமான டி. ராஜேந்தர் அவர்களின் மூத்த மகன் ஆவார். தனது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சிம்பு. சிம்பு நடிகர் மட்டுமல்லாமல் அற்புதமான பாடகரும் நடன கலைஞரும் ஆவார்.

2002 ஆம் ஆண்டு தனது தந்தை இயக்கிய ‘காதல் அழிவதில்லை’ திரைப்படத்தின் வாயிலாக ஹீரோவாக அறிமுகமானார் சிம்பு. 2004 ஆம் ஆண்டு ஹரி இயக்கிய ‘கோயில்’ திரைப்படம் மூலமாக பிரபலமானார் சிம்பு. கோவில் திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

தொடர்ந்து ‘குத்து’, ‘மன்மதன்’, ‘தொட்டி ஜெயா’, ‘சரவணா’, ‘வல்லவன்’, ‘காளை’, ‘சிலம்பாட்டம்’ போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2010 ஆம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் நடித்தார். இப்படம் சிம்புவின் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அடுத்து ‘வானம்’, ‘இது நம்ம ஆளு’, ‘அச்சம் என்பது மடமையடா’ ‘செக்க சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடிக்கும் போதே நன்றாக உடை எடை கூட ஆரம்பித்தது சிம்பு அவர்களுக்கு. ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் ஆளே மாறிப்போய் உடல் எடை கூடியிருந்தார் சிம்பு.

பின்னர் கஷ்டப்பட்டு 30 கிலோ வரை எடை குறைத்து 2021 ஆம் ஆண்டு ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தில் அனைவரும் ஆச்சர்யப்படும்படி கம்பேக் கொடுத்தார். தற்போது சிம்பு படத்திற்காக தான் உடல் எடையை குறைத்தார் என்று அனைவரும் பேசிவந்த நிலையில், தான் உடல் எடையை குறைத்ததற்கான உண்மையான காரணத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால், நம்மிடம் இருக்கும் கார், வீடு, பணம் எல்லாம் நம்மை விட்டு சென்றாலும் சென்றுவிடும். ஆனால் நம்முடன் கடைசி வரை வருவது நம் உடல் தான். அதனால் அதை பாதுகாக்க வேண்டும், அதை நான் லேட்டாக தான் புரிந்துகொண்டேன். அதற்காக தான் உடை எடையை குறைத்தேன் என்று கூறியுள்ளார் சிம்பு.