பிக்பாஸ் செட்டில் கமல்ஹாசன் திட்டியும்.. பதிலுக்கு சிரிச்சுகிட்டே இருந்த டைரக்டர் நெல்சன்.. பின்னணி இதான்..

By Ajith V

Published:

கடந்த 1996 ஆம் ஆண்டு, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருந்த திரைப்படம் தான் இந்தியன். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் பெரிய ஹிட்டாக, ஊழலுக்கு எதிரான கதைக் களத்தை விறுவிறுப்பாக உருவாக்கி வெற்றி கண்டிருந்தார் இயக்குனர் ஷங்கர்.

இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசனின் ஸ்டண்ட் காட்சிகள் இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் பணிகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பமாகி இருந்தது. காலத்திற்கு ஏற்ப, இந்தியன் தாத்தா அப்டேட்டடு வெர்ஷன் கமலாகவும் அவர் திரும்பி வந்துள்ளார்.

இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதியன்று ரிலீசாக உள்ள நிலையில், ஏ ஆர் ரஹ்மானுக்கு பதிலாக இந்த இரண்டு பாகங்களிலும் அனிருத் இசையமைக்கிறார். இவரது இசையில் உருவான பாரா மற்றும் நீலொற்பம் உள்ளிட்ட பாடல்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடந்திருந்தது.

மீதமிருக்கும் பாடல்கள் இந்த நிகழ்வில் ரிலீசாகி இருந்த நிலையில் இந்தியன் முதல் பாகம் அளவுக்கு இல்லை என்றாலும் தற்போது உள்ள இளைஞர்களை கட்டி போடும் வகையிலும் பாடல்கள் அமைந்துள்ளது. மேலும் இந்த நிகழ்வில் இந்தியன் 2 படக்குழுவினர் தவிர பிரபல இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அப்படி இருக்கையில் கமல்ஹாசன் குறித்து நெல்சன் தெரிவித்த கருத்து தற்போது அதிகம் கவனம் பெற்று வருகிறது. “பிக் பாஸ் இயக்குனராக நான் இருந்தபோது தான் இந்த படத்தின் அறிவிப்பு வந்தது. அங்கிருந்து ஆடியோ வெளியீட்டு விழா வரைக்கும் வந்திருப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் உருவான ஐ மற்றும் 2.0 என இரண்டு திரைப்படத்தின் ஆடியோ விழாவுக்கும் நான் தான் இயக்குனர்.

இப்போது கூட இந்தியன் 2 இசை நிகழ்ச்சியை நானே இயக்கி இருக்கலாம் என்று தான் எனக்கும் தோன்றியது. கமல்ஹாசன் சாரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் வந்ததுமே எனக்கு பயமாகிவிட்டது என்று சொல்லலாம். ஏனென்றால் எப்படி அவரிடம் பிழைகளை சொல்வது, எப்படி பேச வேண்டும் என்பதை விளக்குவது என கொஞ்சம் பதட்டமாக இருந்தேன்.

ஒரு நாள் கமல் சார் சற்று கோபத்துடன் வந்தார். அப்போது என்னுடன் இருந்த அனைவரும் ஓடிப்போக நான் மட்டும் தான் அங்கே இருந்தேன். ஸ்க்ரிப்ட் பேப்பரை பார்த்து அதில் இருந்த தவறை பார்த்தீர்களா என என்னிடம் கேட்டார். நானும் மிகக் கூலாக பார்த்தேன் எதுவும் தவறில்லை என சொல்லி விட்டேன். அப்போது கோபத்துடன் இதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருப்பதாக கூறினார்.

கமல் சாருக்கு எப்போதுமே தமிழில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தால் சுத்தமாக பிடிக்காது. இதற்காக அவர் என்னை திட்டவும் செய்தார். கமலுடைய ஸ்பெஷலே அவர் திட்டும்போதும் அழகாக திட்டுவது தான். இதனால் அந்த தினத்தில் கமல் சார் திட்டினார் என நாள் முழுக்க மிகவும் சந்தோஷமாக இருந்தேன்” என நெல்சன் கூறினார்.