சபரிமலை வழக்கு கடந்த பாதை!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதா வேண்டாமா என்ற வழக்கு கடந்த 27 வருடங்களாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வழக்குகள் நடந்தது கடந்த 199ஆம் ஆண்டு தான் முதல் முறையாக எஸ். மஹாதேவன் என்பவர்…

727a51fa42dade0296f0fe346ae80934

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதா வேண்டாமா என்ற வழக்கு கடந்த 27 வருடங்களாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வழக்குகள் நடந்தது

  • கடந்த 199ஆம் ஆண்டு தான் முதல் முறையாக எஸ். மஹாதேவன் என்பவர் சபரிமலை தரிசனத்திற்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கேரளா ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது
  • அதன்பின்னர் கடந்த 2006ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ண பணிக்கர் என்னும் சாமியார் சபரிமலை கோவிலில் பூஜை நடத்திய பூஜையில் ஒரு பெண் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. அதேபோல் கன்னட நடிகை ஜெயமாலா தான் 26 வயதாக இருக்கும்போது சபரிமலை கோவிலுக்குள் சென்றதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்
  • இதன்பின்னர் 2006-ல் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கேரளாவை சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தது. இந்த வழக்கு 2008-ஆம் ஆண்டு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு சென்றது. இந்த வழக்கு சில வருடங்களாக விசாரணைக்கு வராமல் இருந்த நிலையில் 2015-ஆம் ஆண்டு மாதவிடாய் அறியும் கருவி கண்டுபிடித்த பிறகே பெண்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்தது.
  • 2016ஆம் ஆண்டு சபரிமலை விவகாரத்தில் கேரளா அரசு தலையிடாது என்று அப்போதைய கேரளா முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்தார்.
  • 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகளான நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை 2018ஆம் ஆண்டு முடிவடைந்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ‘கடவுள் வழிபாட்டில் இரட்டைமுறை என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது மற்றும் கடவுள் வழிபாட்டில் ஆணும் பெண்ணும் சமம் மேலும் மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுப்பது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டதின் 14-ஆம் பிரிவை மீறுவதாக உள்ளது’ என்று தீர்ப்பு வழங்கியது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன