பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரி அவர்களின் இளைய மகன் நடிகர் ஜீவா. இவரின் இயற்பெயர் அமர் சௌத்ரி என்பதாகும். ஜீவா தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது தந்தை தயாரித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் ஜீவா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2003 ஆம் தனது தந்தை தயாரித்த 50 வது படமான ‘ஆசை ஆசையை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் ஜீவா. இவரது மூத்த சகோதரர் நடிகர் ஜித்தன் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ‘ஈ’, ‘டிஸ்யூம்’, ‘கற்றது தமிழ்’, ‘ராம்’, ‘தெனாவெட்டு’, ‘சிவா மனசில சக்தி’, ‘கோ’, ‘ரௌத்திரம்’, ‘நண்பன்’, ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’, ‘திருநாள்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற வணீக ரீதியாக வெற்றிப் பெற்ற படங்களில் நடித்துள்ளார் ஜீவா.
‘ராம்’ திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு சைப்பிரஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற ஒரே தமிழ் நடிகர் ஜீவா அவர்கள் தான். தனது இயல்பான நடிப்பிற்க்காகவும் வெள்ளந்தியான முகத்திற்காகவும் அதிகப்படியான இளம் ரசிகர்களைக் கொண்டவர் ஜீவா.
தற்போது, ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ஜீவா, சினிமாவில் தான் நடிக்க விரும்பும் ரோல்களைப் பற்றி பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், நான் கலைஞர் கருணாநிதி அவர்களின் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்காமல் வெப் சீரீஸ் ஆக எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளர் ஜீவா.