இதுக்காக தான் நான் மச்சான்னு கூப்பிடுறேன்… நமிதா பகிர்வு…

By Meena

Published:

குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்தவர் நடிகை நமிதா. இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நமிதா.

ஆரம்பத்தில் அழகு போட்டிகளில் கலந்துக் கொண்டு தனது வாழ்க்கையை ஆரம்பித்தார் நமிதா. 1998 ஆம் ஆண்டு தனது 17 வது வயதில் ‘மிஸ் சூரத்’ பட்டத்தை வென்றார். 2001 ஆம் ஆண்டு ‘மிஸ் இந்தியா’ அழகுப் போட்டியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு நான்காம் இடத்தைப் பெற்றார்.

இதன் மூலம் விளம்பர படங்களில் நடிக்க நமிதாவிற்கு வாய்ப்பு வந்தது. ‘ஹிமானி க்ரீம்’, ‘ஹேண்ட் சோப்’, ‘அருண் ஐஸ்க்ரீம்’, ‘நைல் ஹெர்பல் ஷாம்பு’ ஆகிய விளம்பரங்களில் நடித்தார். இதன் வாயிலாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நமிதா.

2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தில் நடித்து தமிழில் நமிதா அறிமுகமானார். இவரது உயரம், தோற்றம், கவர்ச்சி ஆகியவற்றால் விரைவாக பிரபலமானார் நமிதா. விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜுன், சரத்குமார் போன்ற நடிகர்களுடன் நடித்தார். ‘ஏய்’, ‘சாணக்யா’, ‘ஆணை’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘கோவை பிரதெர்ஸ்’, ‘நான் அவன் இல்லை’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘பில்லா’ போன்ற திரைப்படங்களில் நமிதா நடித்தவைகளில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

கவர்ச்சி மட்டுமல்லாது தமிழ்நாடு இளைஞர்களை ‘மச்சான்’ என்று கூப்பிடுவது மூலமாகவும் புகழடைந்தவர் நமிதா. அவர் ஏன் மச்சான் என்று கூப்பிட்டார் என்பதற்கான காரணத்தை தற்போது ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், நான் ஷூட்டிங்கில் இருக்கும்போது சுற்றி வேலை செய்பவர்கள், மச்சான் அதை எடு, மச்சான் இதை பண்ணு அப்படினு பேசுவாங்க. நான் அடிக்கடி அந்த வார்த்தையை கேட்டேன். அதற்கு என்ன அர்த்தம்னு கேட்டேன். அதற்கு மச்சான் என்றால் ‘பாசமுள்ள நண்பன்’ என்று அர்த்தம்னு சொன்னாங்க. அதனால் தான் எல்லாரையும் மச்சான் அப்டினு கூப்பிடுறேன் என்று கூறியுள்ளார் நமிதா.