திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ராஜபாளையத்தில் பிறந்தவர் விஜய் சேதுபதி. இவரின் முழுப்பெயர் விஜய குருநாத சேதுபதி காளிமுத்து ஆகும். தமிழ் சினிமாவின் மிக பிரபலமானவரும், குறுகிய காலக்கட்டத்தில் விடாமுயற்சியினால் முன்னணி நடிகராக இடம் பெற்றவர் விஜய் சேதுபதி.
ஆரம்பத்தில் சிறு சிறு வேலைகளை செய்து வந்து பின்னர் கூத்துப் பட்டறையில் கணக்காளராக பணியாற்றினார். அப்படியே கூத்துப் பட்டறையில் நடிக்கவும் கற்றுக் கொண்டார். சினிமாவில் பின்னணி நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கினர் விஜய் சேதுபதி.
‘லீ’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’ போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார் விஜய் சேதுபதி. இவரின் திறமையை கண்ட இயக்குனர் சீனு ராமசாமி, 2010 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியை வைத்து ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படத்தை இயக்கி நாயகனாக அறிமுகப்படுத்தினார். இப்படம் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றது.
தொடர்ந்து ‘பீட்சா’, ‘விக்ரம் வேதா’, ‘சேதுபதி’, ‘தர்மதுரை’, ‘சூது கவ்வும்’, ‘மாஸ்டர்’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘விடுதலை’ போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி. நடிப்பிற்காக மட்டுமல்லாமல் அவரது திறமையான மேடைப் பேச்சிற்காகவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர்.
தற்போது விஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. இப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விஜய் சேதுபதி பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், படம் தியேட்டரில் பாருங்க, படம் பார்த்துட்டு விமர்சனம் சொல்றவங்க கதையை முழுசா சொல்லாம கருத்துக்களை சொல்லுங்க, இது என்னோட வேண்டுகோள் என்று கூறியுள்ளார் விஜய் சேதுபதி