தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான்களான கவுண்டமணி, வடிவேலு, விவேக் ஆகியோரின் வரிசையில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றவர் நகைச்சுவை நடிகர் செந்தில். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் செந்தில்.
தனது தந்தை திட்டியதால் 13 வயதில் தனது கிராமத்தை விட்டு வெளியேறினார் செந்தில். பிழைப்பிற்காக சிறு சிறு வேலைகளை செய்து வந்தார். ஓய்வு நேரத்தில் நாடக கம்பெனியில் சேர்ந்து நடிக்க கற்றுக் கொண்டார் செந்தில். இதன் வாயிலாக அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
1979 ஆம் ஆண்டு ‘ஒரு கோயில் இரு தீபங்கள்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 80 களில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். இவ்விருவரும் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் மக்களால் ரசிக்கப்பட்டது.
கவுண்டமணி- செந்தில் இருவரும் ஜோடியாக கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளனர். 80 களில் புகழின் உச்சத்தில் இருந்தார் செந்தில். சினிமாவில் புகழ்பெற்ற பின்பு தனது சொந்த ஊருக்கு திரும்பி தாய் தந்தையரைப் பார்த்த பின்னர் கலைச்செல்வி என்பவரை மணந்து கொண்டார்.
தற்போது ஒரு நேர்காணலில் செந்தில் தனது மனைவி கலைச்செல்வியுடன் கலந்துக் கொண்டார். செந்தில் அவர்களின் மனைவி தனது கணவரைப் பற்றி அறியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். அதில். என் கணவர் சம்பளம் வாங்கிய பின்பு எனக்கு தெரியாமல் சகா நடிகர்களின் குழந்தைகள் படிப்பு செலவிற்கு, ஏழைகளுக்கு என்று சிறிய தொகையை கொடுத்து விடுவார் என்று கூறியுள்ளார் செந்தில் அவர்களின் மனைவி கலைச்செல்வி.