மோகனை கண்டபடி திட்டிய கே.பாலச்சந்தர்.. மொட்டை அடித்ததால் வந்த வினை.. மிஸ் ஆன மரோசரித்ரா

By John A

Published:

தமிழ் சினிமாவின் வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் மைக் மோகன் முதன் முதலாக பாலுமகேந்திரா இயக்கத்தில் கோகிலா படத்தில் இரண்டாம் நாயகனாக சினிமா உலகில் அறிமுகமானார். இந்தப் படத்தில் கமல்ஹாசன்தான் ஹீரோ. எனினும் மோகனின் நடிப்பும் பிரமாதமாக இருக்கும். இந்தப் படத்தினைப் பார்த்த கே.பாலச்சந்தர் அவரது வெற்றிப் படங்களில் ஒன்றான மரோசரித்ராவை தமிழில் இயக்கத் திட்டமிட்டிருந்தார்.

மரோசரித்ரா திரைப்படம் தெலுங்கிலேயே 700 நாட்களைத் தாண்டி ஓடியது. கமல்ஹாசன், சரிதாவினை தென்னிந்திய மொழிகளில் பிரபலப்படுத்திய படம். இப்படி மொழி தாண்டி நடித்து பெரும் வெற்றியைக் கொடுத்த பாலச்சந்தர், கமல், சரிதா கூட்டணியில் உருவான மரோசரித்ரா திரைப்படத்தினை தமிழில் எடுக்க இயக்குநர் கே.பாலச்சந்தர் திட்டமிட்ட போது கோகிலா படத்தினைப் பார்த்துள்ளார். அப்போது அதில் மோகனின் நடிப்பு பிடித்திருக்க இந்தப் படத்தில் மோகனை ஹீரோவாக தமிழில் அறிமுகப்படுத்தலாம் என எண்ணி மோகனை தனது அலுவலகத்திற்கு வரச்சொல்லி அட்வான்ஸ்சும் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் மோகன் தெலுங்கில் தூர்ப்பு வெள்ளே ரயில் என்ற படத்தில் அறிமுகமானார். இது நம்மூர் பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தின் தெலுங்கு பதிப்பு. அதேசமயம் மரோசரித்ரா பணிகள் தொய்வடைந்தது. தெலுஙகு தூர்ப்பு வெள்ளே ரயில் படத்தில் ஒரு காட்சியில் மோகன் மொட்டையடித்து, மீசை எடுத்து கழுதைமேல் ஏறி வருவார்.

அந்தக் காட்சிக்காக தலைமுடியை எடுத்து, மீசையையும் எடுத்திருந்தார். கே.பாலச்சந்தர் மறுபடியும் மோகனை அழைக்க அப்போது மொட்டைத் தலையுடன் சென்ற மோகனைப் பார்த்த பாலச்சந்தர் கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார். ஏன் இப்படி மொட்டை எடுத்தாய் என்று கேட்டு கன்னாபின்னமாகத் திட்டியிருக்கிறார்.

புரோட்டா காமெடியில் உண்மையாகவே சூரி எத்தனை புரோட்டா சாப்பிட்டார் தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்

இதனால் மோகன் மிக வருத்தமடைந்தார். என்னைக் கேட்டுவிட்டு நீ மொட்டை அடித்திருக்க வேண்டியதுதானே என்று கடிந்து கொண்டார். இதனால் மரோ சரித்ரா பட வாய்ப்பு தமிழில் எடுப்பது அப்படியே நின்றது. அதேசமயம் தெலுங்கில் சக்கைப் போடு போட்டதால் அதனை அப்படியே மீண்டும் தமிழ்நாட்டில் மொழிமாற்றம் செய்யாமல் வெளியிட இங்கும் வெற்றி பெற்றது. ஆனால் மோகனுக்கு தமிழில் பாலச்சந்தர் மூலமாக கிடைக்கவிருந்த அறிமுகத்தை இழந்தார்.

இதனையடுத்து இயக்குநர் பாலுமகேந்திரா மீண்டும் தமிழில் ஒருபடம் இயக்ககினார். அந்தப் படம்தான் நெஞ்சத்தைக் கிள்ளாதே. இந்தப் படத்தில் மோகனை ஹீரோவாக்கி தமிழில் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் மோகனுக்காக கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் திருப்பி வாங்கப்படவே இல்லையாம்.