தமிழ் திரையுலகில் நடிகராக வேண்டும் என்ற கனவோடு வந்த பலரில் ஒருவர் நடிகர் முனீஷ்காந்த். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பிறந்தவர் நடிப்பின் மீது உள்ள விருப்பத்தினாலும் ஆசையினாலும் 2002 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார்.
சிறு சிறு வேடங்களில் நடித்தப்பதற்கு மட்டுமே முனீஷ்காந்த்க்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இரண்டு ஆண்டுகள் மலேசியாவிற்கு வேளைக்கு சென்றார். அங்கிருந்து திரும்பிய பின்பு குறும்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினர்.
கலைஞர் தொலைக்காட்சியில் நடைபெற்ற நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் திரையிடப்படும் குறும்படங்களில் நடித்தார். 2012 ஆம் ஆண்டு ‘கடல்’, ‘சூது கவ்வும்’, ‘நேரம்’ போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
2014 ஆம் ஆண்டு வெளியான ‘முண்டாசுப்பட்டி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் ‘ஜிகர்தண்டா’, ‘பசங்க 2’, ‘மாப்ள சிங்கம்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘மாநகரம்’, ‘மரகத நாணயம்’ ஆகிய படங்களில் நடித்தார். 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ராட்சசன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் முனீஷ்காந்த்.
தொடர்ந்து விஜய் சேதுபதி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார் முனீஷ்காந்த். தற்போது, சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார் முனீஷ்காந்த். அவர் கூறியது என்னவென்றால், சினிமால முதல்ல நடிக்கும் போது ரொம்ப கம்மியான சம்பளம்தான் எனக்கு, அதனால பிழைப்புக்காக நடிக்கிற நேரம் தவிர மீதி இருக்கிற நேரங்களில் கார் கழுவுற வேலை, கேட்டரிங்கில் வேலை, கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்குற வேலை என அனைத்து வேலையும் செய்திருக்கிறேன். வீடு இல்லாம எத்தனையோ நாட்கள் வடபழனி முருகன் கோவில்ல தூங்கிருக்கேன் என்று எமோஷனலாக பகிர்ந்துள்ளார் முனீஷ்காந்த்.