இந்த நடிகர் பெண்ணாக பிறந்திருந்தால் நிச்சயம் அவரை காதலித்திருப்பேன்… ஸ்ரீகாந்த் பேச்சு….

By Meena

Published:

தெலுங்கு குடும்ப பின்னணியைக் கொண்ட சென்னையில் பிறந்து ஹைதராபாத்தில் வளர்ந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் ஸ்ரீகாந்த் ஸ்ரீராம் என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகாந்த் தனது கேரியரை மாடெல்லிங் துறையில் மாடெலாக ஆரம்பித்தார். அதன் மூலம் திரையுலகில் வாய்ப்பு வந்தது. 2002 ஆம் ஆண்டு ‘ரோஜாக்கூட்டம்’ திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

பின்னர் சினேகாவுடன் இணைந்து 2002 ஆம் ஆண்டு ‘ஏப்ரல் மாதத்தில்’, த்ரிஷாவுடன் இணைந்து 2003 ஆம் ஆண்டு ‘மனசெல்லாம்’ ஆகிய படங்களில் நடித்து ஸ்ரீகாந்த் அவரின் நடிப்பிற்காக பாராட்டப்பட்டார். அதே ஆண்டு மறுபடியும் சினேகாவுடன் ‘பார்த்திபன் கனவு’ திரைப்படத்தில் நடித்தார்.

பார்த்திபன் கனவு திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று ஸ்ரீகாந்த் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நடித்ததற்காக தமிழ் அரசு மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறப்பு பரிசை வென்றார் ஸ்ரீகாந்த்.

தொடர்ந்து ‘கனா கண்டேன்’ (2005), ‘ஒரு நாள் ஒரு கனவு’ (2005), ‘பம்பர கண்ணாலே’ (2005), ‘மெர்குரி பூக்கள்’ (2006), ‘வல்லமை தாராயோ’ (2008) ‘பூ’ (2008), ‘இந்திர விழா’ (2009), ‘நண்பன்’ (2012) ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பின்பு விருந்தினராகவும் சிறப்பு தோற்றத்திலும் நடித்தார் ஸ்ரீகாந்த்.

தற்போது, ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ஸ்ரீகாந்த் அவர்களிடம் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ரீகாந்த், எனக்கு தனுஷ் அவர்களை மிகவும் பிடிக்கும், நடிப்பிலும், நடனத்திலும் என அனைத்திலும் அவர் மிகவும் திறமையானவர். அவர் திறமையைக் கண்டு நானே பொறாமைப்பட்டுள்ளேன். அவர் பெண்ணாக பிறந்திருந்தால் நிச்சயம் நான் அவரை காதலித்திருப்பேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.