புரோட்டா காமெடியில் உண்மையாகவே சூரி எத்தனை புரோட்டா சாப்பிட்டார் தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்

By John A

Published:

நடிகர் சூரி இன்று கருடனாக திரையுலகம் என்னும் விண்ணில் உயரே பறந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு விதை போட்டது புரோட்டா காமெடிதான். புரோட்டா சூரி இன்று வெற்றிமாறனால் செதுக்கப்பட்டு விடுதலையில் ஹீரோவாகி கருடனில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஷுட்டிங் ஸ்பாட்களில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து அங்கே சிறு சிறு காட்சிகளில் முகத்தைக் காட்டி இன்று முன்னனி ஹீரோக்களுக்கு நிகராக விளங்குகிறார் சூரி.

சூரிக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் என்றால் அது வெண்ணிலா கபடிக் குழு படம் தான். இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்தில் இவரைத் தேர்ந்தெடுக்கும் போது பல நாட்கள் அவருக்கான காட்சியே இல்லாமல் இருந்திருக்கிறது. இதனால் ஷுட்டிங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு முக்கிய காமெடி கதாபாத்திரம் ஒன்றைக் கொடுத்து ஒரே நாளில் திரையுலகில் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அந்தக் காமெடிதான் புரோட்டா காமெடி.

மிஷ்கின் படத்தில் வேண்டா வெறுப்பாக நடித்த பாண்டியராஜன்.. படத்தின் வெற்றியால் கனிந்த நட்பு

புரோட்டா காமெடியைப் பார்த்து வயிறு வலிக்கச் சிரிக்காதவர்கள் எவரும் இல்லை. “நீ தப்புதப்பா கணக்குப் போடுற கோட்டை அழி முதல்ல இருந்து சாப்பிடுறேன்..” என்று சூரி கூறும் அந்த வசனத்திற்கு தியேட்டரே சிரிப்பு வெடியில் அதிரும். இந்தக் காமெடியில் நடிப்பதற்காக சூரி காலையில் இருந்தே சாப்பிடாமல் இருந்தாராம்.

இயக்குநர் சுசீந்திரன் இவருக்கு வெறும் டீ மட்டும் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அதன்படி அவ்வப்போது டீயை மட்டும் குடித்துக் கொண்டு இரவு வரை பசியைத் தாங்கிக் கொண்டு கடைசியாக புரோட்டா சாப்பிடும் காட்சியில் நடிக்கும் போது 13 புரோட்டாக்கள் வரை சாப்பிட்டராம் சூரி.

இயக்குநர் சுசீந்திரன் இவரிடம் ஷுட்டிங் முடிந்த பின் கூறும் போது உண்மையான பசியை உள்ளவனுக்குத் தான் அந்த பசிக் கொடுமையால் சாப்பிடும் முக பாவணைகள் வரும். நீ அவ்வப்போது சாப்பிட்டு இக்காட்சியில் நடித்திருந்தால் அந்த முகபாவனைகள் கண்டிப்பாக கிடைத்திருக்காது. எனவே தான் உனக்கு காலையிலிருந்து சாப்பாடு கொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

13 புரோட்டாக்களை ஒரே தடவையில் சாப்பிட்ட சூரி சில நேரம் முடியாமல் யாருக்கும் தெரியாமல் பின்னே போட்டு விட்டாராம். எனினும் இந்தக் காமெடியே சூரிய என்ற காமெடியனை முன்னனி ஹீரோக்களுடன் நடிக்க வைத்து இன்று கதையின் நாயகனாக மாற்றி அழகு பார்த்திருக்கிறது. சினிமா ஒருவரை எப்படியெல்லாம் மாற்றும் என்பதற்கு சூரியின் வளர்ச்சி அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு.