காதலர் தினம் கொண்டாடும் காரணம் தெரியுமா?!

By Staff

Published:


bc25524ea2ca972e7af081311ac884fc-1

பிப்ரவரி மாதம் முழுக்க காதல் காய்ச்சல் எடுத்து திரிவாங்க. ஹோட்டல், துணி கடைகள், க்ரீட்டிங் கார்ட்ன்னு விதம்விதமா ஆஃபர் இருக்கும். ஏன் இப்படின்னு கேட்டால் காதலர்தினம் என காரணம் சொல்வாங்க, காதலர் தினம் உருவான கதையை பார்க்கலாமா?!

கிளாடியுஸ் மிமி என்ற அரசரின் ஆட்சிக்காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை விட்டுள்ளார். இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் என்பவர் அரசனின் அறிவிப்பைமீறி இரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி வைத்தான். இதனையறிந்த மன்னன், பாதிரியார் வால்ண்டைனை கைது செய்ததோடு, மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், சிறைக்காவலருக்கு இது தெரியவர அஸ்டோரியசை வீட்டுக்காவலில் வைத்தான். அப்போதுதான் வாலண்டைன் அஸ்டோரியசுக்கு தனது காதல் வாழ்த்து அட்டை மூலம் செய்தி அனுப்பினார்.  இதுவே உலகின் முதல் காதல் வாழ்த்து அட்டையாகும். இதேநேரத்தில்தான் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவை செய்த நிலையில் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் கொல்லப்பட்டார். அந்தநாள் கி.பி.270, பிப்ரவரி 14ம் நாள். இந்த நாளை வாலண்டைன் டே எனப்படும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Leave a Comment