ஒரு வீட்டிலோ அல்லது கோவிலிலோ ஹோமம் செய்வதால் அது அங்கிருப்பவர்களுக்கு நன்மை செய்வதோடு மட்டுமல்லாமல், சுற்றுச் சூழலுக்கும் நன்மை செய்கிறது. ஹோமப் புகையும் ஹோமத்தின்போது கூறப்படும் மந்திரங்களும் ஒரு வீட்டை மட்டுமல்ல ஊரையே காப்பாற்றும். இதுபோல எல்லோரும் செய்து வந்தால் காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படும். நன்கு மழை பெய்யும். இயற்கை சீற்றம் ஏற்படாது. ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும் என்று ஜோதிட வல்லுநர்களும், அறிவியல் வல்லுனர்களும் கூறுகின்றனர். ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒருமுறை கணபதி ஹோமம் செய்வதோடு, பிறரையும் செய்யலாம். இது வீட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மிக நல்லது.