கோவையை பூர்வீகமாக கொண்டவர் மற்றும் ரெங்கராஜ் என்ற இயற்பெயரைக் கொண்டவர் சத்யராஜ். இவர் தமிழ் திரைப்பட நடிகர். ஆரம்பத்தில் எதிர்மறை கதாபத்திரங்களில் நடித்த சத்யராஜ் அவர்கள் பின்னர் நடிகராக நடித்து பிரபலமானவர். மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் சத்யராஜ்.
1978 ஆம் ஆண்டு ‘சட்டம் என் கையில்’ என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ் 1985 ஆம் ஆண்டு ‘சாவி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். நாயகனாக இதுவே சத்யராஜுக்கு முதல் படம் ஆகும்.
சத்யராஜ் அவர்களின் கல்லூரி நண்பனான மணிவண்ணன் சத்யராஜை நாயகனாக வைத்து படம் இயக்க தொடங்கினர். மண்வண்ணன் இயக்கி சத்யராஜ் நடித்த ‘அமைதிப்படை’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. மணிவண்ணன் அவர்கள் சத்யராஜை வைத்து கிட்டத்தட்ட 25 படங்கள் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நூறாவது நாள், நீதியின் நிழல், மிஸ்டர் பரத், ரிக்ஷா மாமா, வால்டர் வெற்றிவேல், திருமதி பழனிசாமி, வள்ளல் , மலபார் போலீஸ், மாமன் மகள் போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். அன்று முதல் இன்று வரை தனித்துவமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றவர். ‘பாகுபலி’ திரைப்படத்தில் ‘கட்டப்பா’ கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது மற்றும் இந்தியா முழுவதும் புகழடைந்தார் சத்யராஜ்.
இந்நிலையில், தற்போது பிரதமர் மோடி அவர்களின் வாழ்க்கை வரலாறு சுயசரிதை படமாக உருவாகிறது எனவும் அதில் மோடியாக சத்யராஜ் நடிக்கிறார் எனவும் செய்திகள் இணையத்தில் பரவி வந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சத்யராஜ் பதிலளித்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், பிரதமர் மோடி அவர்களின் Biopic -ல் நான் நடிக்கவில்லை. என் நண்பன் மணிவண்ணன் இருந்திருந்தால் அவர் மோடியின் சுயசரிதையை தத்ரூபமாக இயக்கியிருப்பார். ஆனாலும் இப்போது இயக்குனர்கள் வெற்றிமாறன், பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் மோடி அவர்களின் சுயசரிதையை இயக்க முன் வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார் சத்யராஜ்.