பாரதியாரின் மீசை, கோட் ரகசியம் இதான்.. யாரும் தெரியாத பாரதியாரைப் பற்றிய அரிய தகவல் சொன்ன எள்ளுப்பேரன்

By John A

Published:

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மிகப்பெரியது. ஏனெனில் முதன் முதலாக விடுதலைப் போராட்டம் தொடங்கியதே வேலூர் சிப்பாய் கலகத்தில் தான். ஆனால் அதற்கும் முன்பே ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வரி கட்டுவதை எதிர்த்து வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார் ஆகியோர் குரல் கொடுத்து ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு ஆளாகி வீரமரணம் எய்தினர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னுடைய எழுத்தால் விடுதலை வேட்கையைத் தூண்டி வெள்ளையர்களுக்கு எதிராக போராடிய தேசத் தலைவர் தான் மகாகவி பாரதியார். வங்கத்தில் எப்படி ரவீந்திரநாத் தாகூர் வடக்கே குரல் கொடுத்தாரோ அவரைப் பின்பற்றி தமிழகத்தில் சுப்ரமணிய பாரதியார் தன் எழுத்தின் வீச்சால் ஆங்கிலேயருக்கு பதிலடி கொடுத்தார்.

பாரதியாரைப் பற்றிக் கூறும் போது முதலில் நினைவுக்கு வருவது அவரின் முறுக்கு மீசையும், முண்டாசும், கருப்பு அங்கியும் தான். பாரதியார் உருவத்தை வரையும் போது ஒரு மீசையை மட்டும் வரைந்தால் போதும் சிறு குழந்தை கூட அது பாரதி என்று எளிதாகக் கண்டறியும்.

இப்படி பாரதியாரின் அடையாளமாக விளங்கும் மீசைக்கும், முண்டாசுக்கும், கருப்பு அங்கிக்கும் பின்னால் ஒரு வரலாறே உள்ளது. பாரதியாரின் அடையாளமாக இது எப்படி உருவாகியது என்பதை பாரதியாரின் எள்ளுப் பேரனும், பாடலாசிரியருமான நிரஞ்சன் பாரதி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில் பாரதியார் தமிழகத்திலிருந்து காசிக்குச் சென்று அங்கே சில காலம் தங்கியிருந்திருக்கிறார்.

வாழ்க்கைத் தத்துவத்தை யதார்த்தமாக ஒரே பதிலில் சொன்ன மம்முட்டி.. இவ்வளவு புரிதலா?

பாரதியார் பிராமண சமுதயாத்தில் பிறந்ததால் வாரவாரம் மீசை, தாடியை மழிப்பது வழக்கமாம். அங்கும் பாரதியார் சென்று தன் குல வழக்கப்படி மீசை, தாடியை மழித்துக் கொண்டிருக்க, இதனைக் கவனித்த சிலர் உங்கள் வீட்டில் வாரந்தோறும் யாராவது இறந்து விடுவார்களா என்று கேட்டுள்ளனர்.

ஏன் என்று பாரதியார் கேட்க, இல்லை வாரந்தோறும் மீசையையும், தாடியையும் மழிக்கிறீர்களே என்று கேட்டிருக்கின்றனர். அப்போதுதான் பாரதியார் இதுகுறித்து யோசித்திருக்கிறார். காசியில் உள்ள பிராமணர்கள் இவ்வாறு செய்வதில்லையாம். எனவே அன்று முடிவெடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

தன்னுடைய தோற்றத்தினையே மாற்றியிருக்கிறார். தலையில் முண்டாசு, முறுக்கிய மீசை, கருப்பு அங்கி ஆகியவற்றை அணிய ஆரம்பித்திருக்கிறார். ஆனால் பாரதியாரின் இந்த மாற்றம் காசியில் அவர் தங்கியிருந்த உறவினருக்கு பிடிக்காததால் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்.

அதன்பின் மீண்டும் தமிழகம் வர பாரதியாரைப் பார்த்து பிராமண குலத்தவர் விமர்சித்தாலும், எதையும் கண்டுகொள்ளாது தன்னுடைய அடையாளமாகவு, வீரத்தின் அடையாளமாகவும் மீசையை முறுக்கி விட்டு வளர்த்திருக்கிறார் பாரதியார். மேலும் பாரதியின் கருப்புஅங்கி அணிவது வறுமையை மறைக்க அல்ல. தன்னுடைய அடையாளத்திற்காகவே தான்.